The Odyssey Box Office: இந்திய படங்களை முதல் நாளிலேயே ஓடவிட்ட ஒடிஸி.. நோலனின் பிரம்மாண்ட வசூல் வேட்டை!
சென்னை: இந்தியாவில் ஒரிஜினல் ஐமேக்ஸ் புரொஜெக்டர்கள் இல்லை என்றாலும் டிஜிட்டல் தரத்தில் வெளியான 'தி ஒடிஸி' படத்தின் ஸ்க்ரீன் கட் ஆனாலும் கிறிஸ்டோபர் நோலனின் படைப்பை முதல் நாளே பார்த்தே தீருவோம் என ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்த நிலையில், அதிகப்படியாக இந்தியா முழுவதும் முதல் நாளே 20 கோடி வசூலை தி ஒடிஸி படம் தட்டித் தூக்கியுள்ளது.
இந்தியாவில் 'தி ஒடிஸி' படத்தை கிறிஸ்டோபர் நோலன் நேரடியாக வந்து புரமோட் செய்ய முக்கிய காரணமே இந்திய ரசிகர்கள் புராண படங்களை விரும்பி பார்ப்பார்கள் என்கிற நோக்கத்தில் தான் என்பது படத்தை பார்த்தாலே புரிந்துக் கொள்ள முடிகிறது.

முதல் நாளில் இந்தியாவில் அதிகப்படியாக 8413 ஷோக்கள் 'தி ஒடிஸி' படத்திற்காக திரையிடப்பட்ட நிலையில், நேற்று வெளியான இந்திய படங்களை விட முதல் நாள் வசூலில் பிரம்மாண்ட ஓபனிங்கை நோலனின் 'தி ஒடிஸி' படம் அள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ப்ரீமியர் வசூல்: கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி' திரைப்படம் கிரேக்க கவிஞர் ஓமர் எழுதிய 'ஒடிஸி' புராண கதையில் இருந்து தழுவி எடுக்கப்பட்டது. கிளைமேக்ஸில் வரும் சுயம்வரப் போட்டியெல்லாம் பார்த்தால் அப்படியே ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் பார்த்த ஃபீலிங் தான் வருகிறது. மிகச் சிறந்த வில்லாலனாகவும் ட்ரோஜன் ஹார்ஸ் உருவாக்கி ட்ராய் போரை வென்ற ஒடிஸியஸின் கதை தான் இந்த 'தி ஒடிஸி' திரைப்படம். முதல் நாளில் சர்வதேச அளவில் ப்ரீமியர் காட்சிகள் மூலமாக மட்டுமே 17.6 மில்லியன் டாலர் வசூலை இந்த படம் பார்த்துள்ளது. இந்திய மதிப்பில் 160 கோடி ரூபாய்.
முதல் வாரம் 200 மில்லியன் ஓபனிங்: முதல் வாரத்தில் இந்த படம் வட அமெரிக்காவில் மட்டும் 117 மில்லியன் டாலர் ஓபனிங்கை எதிர்பார்க்கிறதாம். உலகளவில் ஒட்டுமொத்தமாக 200 மில்லியன் டாலர் வரை ஓபனிங் இருக்கும் என ஹாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கிட்டத்தட்ட 2000 கோடி வசூலை அள்ளிவிடும் என்கின்றனர்.
இந்தியாவில் 20 கோடி வசூல்: அப்செஷன் படத்தைத் தொடர்ந்து இந்தியாவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை தி ஒடிஸி திரைப்படம் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ சான்றிதழ் உடன் ஒரு சில நிர்வாணக் காட்சிகளுடன் இந்திய திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படம் முதல் நாளே 17.40 கோடி நெட் வசூலையும் கிராஸாக 20.76 கோடி வசூலையும் ஈட்டியுள்ளதாக சாக்னிக் தெரிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிறுகளில் வசூல் மேலும், அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மட்டுமே அதிகப்படியாக 60 முதல் 80 கோடி வரை தி ஒடிஸி படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு எதிரான நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக வசூல் பாதிக்குமா? அல்லது நோலனுக்காக ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுப்பார்களா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications