சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்!
மும்பை: பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள தபங் 3 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
காலை முதலே விஜய்யின் பிகில் பட டிரெண்டிங்கால் பின் தங்கியிருந்த தபங் 3 படத்தின் ஹேஷ்டேக் தற்போது முதலிடம் பிடித்துள்ளது.
கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் டிசம்பர் 20ம் தேதி தபங் திரைப்படம் திரைக்கு வருகிறது.

சுல்புல் பாண்டே
அபினவ் கஷ்யப் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான தபங் முதல் பாகம் சல்மான் கானுக்கு மாபெரும் வசூல் படமாக அமைந்தது. இந்த படத்தில் சுல்புல் பாண்டே எனும் நகைச்சுவை மற்றும் மாஸ் கலந்த போலீஸ் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்தது அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போக சுல்புல் பாண்டேவின் வேட்டை தொடர்கிறது.

மாற்றமில்லை
தபங் முதல் பாகத்தில் நாயகியாக நடித்திருந்த சோனாக்ஷி சின்ஹாவே தபங் 3 படம் வரை தொடர்கிறார். ஆனால், தபங் 3 படத்தில் மற்றொரு நாயகியாக சயி மஞ்ச்ரேக்கர் அறிமுகமாகிறார். சோனாக்ஷி சின்ஹாவுடன் ரகளையான ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இந்த படத்திலும் மாறாமல் அப்படியே இருப்பது கூடுதல் சிறப்பு.

பிரபுதேவா இயக்கம்
தமிழ், தெலுங்கு மொழிகளில் படங்களில் இயக்கி வந்த பிரபுதேவா பாலிவுட்டிலும் சில படங்களில் இயக்கியுள்ளார். தற்போது சல்மான் கான் எழுத்தில் உருவாகியுள்ள தபங் 3 படத்தை இயக்கியுள்ளார் பிரபுதேவா. மேலும், சல்மான் கான் நடிக்கவுள்ள அடுத்த படமான ராதே படத்தையும் பிரபுதேவா தான் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைலர் எப்படி இருக்கு?
பெல்ட்டை கழட்டி ரவுடிகளை அடிக்கும் ஒரு காட்சியில் சல்மான் கானின் பேன்ட் கழண்டு விழும் அந்த ஒரு காட்சியே சுல்புல் பாண்டேவின் ரவுசு மீண்டும் ஆரம்பித்துள்ளது என்பதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.
இந்த படத்தை பிரபுதேவா இயக்குவதால், சுல்புல் பாண்டேவுக்கு கொடுக்க வேண்டிய நகைச்சுவை மற்றும் மாஸ் காட்சிகளை குறைவின்றி கொடுத்துள்ளார். சட்டைக்கு பின்னாடி கண்ணாடி மாட்டுவது, சுல்புல் பாண்டேவின் ஃபிளாஷ்பேக் காதல், வில்லன் சுதிப்புடன் பயங்கரமான ஆக்ஷன் சண்டை காட்சிகள் என இந்த தீபாவளிக்கு சல்மான் கானுக்கு விருந்தாகவே இந்த டிரைலர் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











