சும்மா கிழி.. அடேங்கப்பா.. 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து.. செம கிழி!

சென்னை : ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் தர்பார். இப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு பின் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாகவும்,கல்லூரி இளைஞனைப்போல உடையை மாற்றி மிகவும் ஸ்டைலாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார் ரஜினி.

வழக்கம் போல ஏ.ஆர். முருகதாஸ் படம் என்றாலே ஒரு கூடுதல் எதிர் பார்ப்பு இருக்கும், அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாக இருந்தது.

திறமையானவர்

திறமையானவர்

தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு,இந்தியிலும் பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி அங்கேயும் திறமையான இயக்குனர் என பெயர் எடுத்துள்ளார்.

மாஸாகவே காட்டினார்

மாஸாகவே காட்டினார்

ரஜினியை வைத்து எப்படியாவது ஒரு படமாக எடுத்துவிடவேண்டும் என்பது முருகதாஸின் நீண்டநாள் ஆசை. அவரது ஆசை நிறைவேற்றிய படம் தான் தர்பார் . முருகதாஸ் ரஜினியின் ரசிகர் என்பதால் ரஜினி வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவரை மாஸாகவே காட்டி இருப்பார்.

டிரெண்டிங்

டிரெண்டிங்

இந்த படத்தின் முதல் பாடலாக அமைந்த 'சும்மா கிழி' வெளியான நாளில் இருந்த செம வைரலானது. இப்பாடலுக்கு அனிருத் இசை அமைத்தார். இந்த பாடலை மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் அனிருத் இணைந்து பாடி இருந்தனர். இந்த பாடலுக்கு பாடலாசிரியர் விவேக் வரிகள் அமைந்து இருந்தார்.

தெலுங்கிலும் வெற்றி

தெலுங்கிலும் வெற்றி

இணையத்தில் வெளியானது முதலே டிரெண்டிங்கில் நம்பர் ஒன்னாக இருந்த இந்த சும்மா கிழி பாடல் இருந்தது. இப்பாடல் தெலுங்கிலும் தும்லி தோலி என வெளியானது. தமிழைப்போல தெலுங்கிலும் இந்த பாடல் பட்டையை கிளப்பி அனைவரையும் ஆட்டம் போடவைத்தது.

இதுவும் வைரல்

தற்போது, தியோமூவி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், சும்மா சுழி பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்ததை கொண்டாடும் விதமாக,மாஸ் அப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சும்மா கிழி மாஸ் 50 மில்லியன் வியுவர்ஸ் என பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X