குடுக்கு பட்டிய குப்பாயம்... குத்தாட்டம் போட்ட பாதிரியார்- வைரலாகும் வீடியோ

சென்னை: நடிகர் நிவின் பாலி, நயன்தாரா நடித்த லவ்-ஆக்ஷன்-ட்ராமா படத்தில் இடம்பெற்றுள்ள குடுக்கு பட்டிய குப்பாயம் பாடலுக்கு பாதிரியார் ஒருவர் நடனம் ஆடும் வீடியோ பதிவு ஒன்றை நிவின் பாலி தன்னுடைய ட்விட்டர் பக்கதில் வெளியிட்டுள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நம்மூரில் செல்லாத்தா செல்ல மாரியாத்தா பாடல் ஒலித்தால் எப்படி சில பேர் சாமியாடுவார்களோ அதே மாதிரி பாதிரியாரும் குடுக்கு பட்டிய குப்பாயம் பாட்டை கேட்டதும் தன்னை மறந்து ஆட ஆரம்பித்துவிட்டார்.

கொஞ்ச காலமாக சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடலை கேட்டவுடன் தன்னை அறியாமலேயே ஒரு கருத்துள்ள மலையாள பாடலுக்கு ஆடி பாடி வந்தர்களே ஞாபகம் வருதா. ஆமாங்க, ஜிமிக்கி கம்மல் பாடலே தான் அந்த தத்துவ பாடல்.

Church Priest Dancing for Kudukku song-viral on social media

அந்த பாடல் எப்படி வைரலாகி பட்டி தொட்டி எல்லாம் ஆட்டி வைத்ததோ அதே போல லவ்-ஆக்ஷன்-டிராமா திரைப்படத்தில் குடுக்கு பட்டிய குப்பாயம் என்கிற பாடல் அடுத்ததாக வைரலாகி வருகிறது. இது வரையிலும் அந்த பாடலை யூடியூபில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

நிவின் பாலி, நயன் தாரா நடிப்பில் வெளியாகியுள்ள லவ்-ஆக்ஷன்-டிராமா படத்தில் 'குடுக்கு பட்டிய குப்பாயம்' என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. தற்போது இப்பாடல் மலையாள ரசிகர்களின் மத்தியில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாகி உள்ளது.

அதற்கு உதாரணம் சமீபத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வு தான். டெல்லியில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றில் மேத்யூ கிளிக்கெச்சிரா என்ற ஒரு பாதிரியார் இந்த பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளார்.

இறை வழிபாட்டிலும் இறை தொண்டிலும் தன்னையே அர்ப்பணித்து சுக துக்கம் என அனைத்தையும் துறந்து இறைவனுக்கு சேவை செய்வதையே முழுமூச்சாக கொண்டிருக்கும் பாதிரியார் மேத்யூ கிளிக்கெச்சிரா. இவர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் லவ்-ஆக்ஷன்-டிராமா படத்தின் குடுக்கு பட்டிய குப்பாயம் பாடல் ஒலிக்கப்பட்டதும் தன்னை மறந்து குத்தாட்டம் போட ஆரம்பித்துவிட்டார்.

நம்மூரில் செல்லாத்தா செல்ல மாரியாத்தா பாடல் ஒலித்தால் எப்படி சில பேர் சாமியாடுவார்களோ அதே மாதிரி பாதிரியாரும் குடுக்கு பட்டிய குப்பாயம் பாட்டை கேட்டதும் தன்னை மறந்து ஆட ஆரம்பித்துவிட்டார். இந்த ஆட்டத்தின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

லவ்-ஆக்ஷன்-ட்ராமா படத்தின் ஹீரோ நிவின் பாலி இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜிமிக்கி கம்மல் பாடல் வெற்றியின் வரிசையில் இந்த குடுக்கு பட்டிய குப்பாயம் பாடலும் சேர்ந்துள்ளது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X