Don't Miss!
- News
ஓபிஎஸ், ஈபிஎஸ் 2 பேருமே வேட்பாளரை அறிவிக்க மாட்டாங்க.. ‘ட்விஸ்ட்’ இருக்கு.. ஜான் பாண்டியன் சொல்றாரே!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Sports
45 பந்துகளாக பவுண்டரிகள் இல்லை.. டெஸ்ட் மேட்ச் போல் டி20 ஆடிய இந்தியா..கடைசி ஓவரில் திரில் வெற்றி
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சுட்டி டிவி, கார்ட்டூன் நெட்வொர்க் சேனல்களின் நிலைமை இப்படி ஆயிடுச்சே… அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை: தொலைக்காட்சி நிறுவனங்கள் பலதரப்பட்ட ரசிகர்களுக்காகவும் பல நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றன.
இதில், குழந்தைகளுக்கான கார்ட்டூன் நிகழ்ச்சிகளுக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், முன்னணி கார்ட்டூன் சேனல்கள் தங்கள் ஒளிப்பரப்பை நிறுத்த முடிவு செய்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ட்ரெண்டிங்கில் பொன்னியின் செல்வன் புதிய ப்ரோமோ…. சன் டிவிக்கு கிடைத்த தொலைக்காட்சி உரிமை!

90ஸ் கிட்ஸ்களின் கொண்டாட்டம்
தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு அதன் தன்மைகளை பொறுத்து பல வகையான ரசிகர்கள் உள்ளனர். ஆனால், அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் நிகழ்ச்சிகள் என்றால், அது கார்ட்டூன் தொடர்களாக தான் இருக்க முடியும். குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் பலதரப்பு ரசிகர்களும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை பார்ப்பது வழக்கம். அப்படி பல கார்ட்டூன் தொடர்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ளன. 90ஸ் கிட்ஸ் ரசிகர்களை தொலைக்காட்சிகளின் பக்கம் திசை திருப்பியதும் கார்ட்டூன் சேனல்கள் தான்.

கார்ட்டூன் நெட்வொர்க்
கார்ட்டூன் தொலைக்காட்சிகளின் முன்னோடி என்றால், அது கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் என அனைவரும் அறிந்ததே. வார்னர் ப்ரதர்ஸ், டிஸ்கவரி நிறுவனங்கள் இணைந்து 1992ல் தொடங்கிய 'Cartoon Network' சேனல், கடந்த 30 ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஒளிப்பரப்பாகி வருகின்றன. The Amazing world, Adventure Tme, Tom and Jerry, Ben 10 போன்ற பல பிரபலமான தொடர்கள், கார்ட்டூன் நெட்வொர்க் சேனலில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில், இந்நிறுவனம் தனது ஒளிப்பரப்பை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் சுட்டி டிவி
அதேபோல், தமிழில் முதன்முறையாக சுட்டி டிவி, கார்ட்டூன் ரசிகர்களுக்காக தொடங்கப்பட்டது. பிரபலமான சன் நெட்வொர்க் சார்பில் 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட சுட்டி டிவி, ஏராளமான தமிழ் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தன. ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்ற இந்த சேனலின் நிலைமை இப்போது மோசமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால், சுட்டி டிவியின் ஒளிபரப்பை நிறுத்த சன் நெட்வொர்க் குழுமம் முடிவு செய்துள்ளதாம்.

ரசிகர்கள் சோகம்
வார்னர் பிரதர்ஸ், சன் நெட்வொர்க் குழுமம் இரண்டுமே சர்வதேச அளவில் புகழ் பெற்ற நிறுவனங்கள் தான். இந்நிலையில், இரண்டு நிறுவனங்களுமே தங்களது கார்ட்டூன் சேனல்களின் ஒளிப்பரப்பை நிறுத்த முடிவு செய்துள்ளது, ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு கார்ட்டூன் நிகழ்ச்சிகளை காட்டி சாப்பாடு ஊட்டியும், தூங்க வைத்து தப்பி பிழைத்த பெற்றோர்கள் தங்களின் நிலை என்ன ஆகப் போகிறதோ என நினைத்து புலம்பி வருகின்றனர். ஆங்கிலம், தமிழ் என அடுத்தடுத்து இரண்டு முக்கியமான கார்ட்டூன் சேனல்கள் மூடப்படுவது துயரமான ஒன்று என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.