சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் மண்டேலா இயக்குனர்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இப்பொழுது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்

அதை தொடர்ந்து ஜாதி ரத்தனாலு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நேரடி தெலுங்குப் படத்திலும் நடித்து தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகிறார்

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வித்தியாசமானதாக அமைக்கப்பட்டிருக்கும்

வித்தியாசமானதாக அமைக்கப்பட்டிருக்கும்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளது. கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயன் டாக்டராக முதல் முறையாக நடித்திருப்பார். பெண் குழந்தைகளை கடத்துவதை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதாக அமைக்கப்பட்டிருக்கும். இதுவரை தனது படங்களில் கலக்கலான காமெடியின் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்த சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் வசனங்கள் பெரிதாக பேசாமல் அமைதியாக வந்து செல்வது பார்க்கும் அனைவருக்கும் வித்தியாசமான அனுபவத்தை தந்தது

கல்லூரி மாணவனாக

கல்லூரி மாணவனாக

டாக்டர் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடுத்ததாக டான் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது இயக்குனர் அட்லியின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து டான் வரும் ஏப்ரலில் வெளியாக உள்ளது.

நேரடியாக தெலுங்கிலும் அறிமுகமாகிறார்

நேரடியாக தெலுங்கிலும் அறிமுகமாகிறார்

சிவகார்த்திகேயனின் படங்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளுகிறது. பல படங்கள் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நேரடியாக தெலுங்கிலும் அறிமுகமாகிறார்.

மண்டேலா இயக்குனர்

மண்டேலா இயக்குனர்

ஜாதி ரத்தனாலு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகும் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை குறித்த புதிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் யோகி பாபு ஹீரோவாக நடித்த திரைப்படம் மண்டேலா.

Recommended Video

முன்னொரு காலத்தில் Episode01 | Chitra Ramkrishna NSE | Himalayan Yogi | Oneindia Tamil
மடோன் அஸ்வின் இயக்கத்தில்

மடோன் அஸ்வின் இயக்கத்தில்

தேர்தலை மையப்படுத்தி வெளியான இந்த படம் அனைத்து தரப்பு மக்களிடமும் பாசிட்டிவ்வான வசனங்களை பெற்றது. சர்வதேச அளவில் விருதுகளையும் இந்த படம் வென்றது. இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்த இயக்குனருடன் மடோன் அஸ்வின் அடுத்ததாக சிவகார்த்திகேயனை இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரோடக்சன்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X