எனக்கு சரி தவறுனு ஒன்னுமே கிடையாது… அப்போ இங்க இருக்குறவங்க லூசு பயலா.. அபிஷேக்கிடம் எகிறிய சிபி!
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், இந்த வாரம் இரண்டு, அதற்கு மேற்பட்டவர்கள் நாமினேஷன் லிஸ்டில் வந்தனர்.
அதன்படி அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவனி ஆகிய 9 பேர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.
அதில் பாவனி மற்றும் அபிஷேக்கை பல பேர் நாமினேட் செய்துள்ளனர்.

சிபி கேப்டன்
நேற்று கேப்டனை தேர்வு செய்வதற்னான டாஸ்க் நடைபெற்றது. இதில், இமான், ராஜு, சிபி, பாவனி மற்றும் இசை ஆகியோர் சிலை போல நிற்கவேண்டும், மற்றவர்கள் அவர்களது சிரிப்பு, அழுகை, கோவம், பயம் போன்ற ஏதேனும் ஒரு உணர்வை தூண்ட வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்கிற்காக நிரூப், அபிஷேக் ராஜா பெண் போல உடை அணிந்து காமெடியாக நடித்தனர்.அப்போது, இமான், அபிஷேக் இடையே சில கருத்து மோதல்களும் நடந்தது. இறுதியாக சிபி வெற்றி பெற்று இந்த வீட்டின் தலைவரானார்

பஞ்சதந்திரம்
காலை வெளியான முதல் ப்ரோமோவில் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்கிற்கு பஞ்ச தந்திரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வீடு அருங்காட்சியமாக மாற்றப்படுகிறது. அந்த வீட்டில் விலை மதிப்பற்ற 5 நாணயங்கள் வைக்கப்படுகின்றன. அதை திருடுபவர்கள், இந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. எனவே எலிமினேஷனில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் பொருட்டு, போட்டியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த டாஸ்கை செய்வது போல் காட்டப்பட்டது.

காலில் விழுந்த தாமரை
இதையடுத்து வெளியான 2வது ப்ரோமோவில், அபிஷேக், பிரியங்கா மற்றும் ராஜு பேசுகின்றனர். முதலில் தாமரையிடம் பேசும் அபிஷேக் உங்களுக்காக தான் நாங்கள் இதனை செய்கிறோம் என கூற, தாமரை அவரது காலில் விழுந்து நீங்கள் கூறியதே போதும் என அழுகிறார். பின்னர் இமான், ராஜுவிடம் நீங்கள் யாரை காப்பாற்றப்போகிறீர்கள் என கேட்க, அதற்கு ராஜு, நான் தாமரையை காப்பாற்றப் போகிறேன் என்கிறார்.

நோ சென்டிமென்ட்
தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில் இதில் சென்டிமென்ட் வேல்யூ கிடையாது என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு காட்டுத்தனமாக கத்துகிறார் அபிஷேக், இதைத்தாண்டா முதல்ல நாங்க சொன்னோம் இப்படி பண்ண வேண்டாம்னு என்று கூறுகிறார் சிபி. இதையடுத்து சிபியிடம் எகிறிய அபிஷேக் பண்ண வேண்டாம்னு பிக் பாஸ் சொன்னாரா. எனக்கு சரி தவறுனு ஒன்னுமே கிடையாது, இதுதான் ஃபன் என்கிறார் அபிஷேக்

நாங்க என்ன லூசா
ஃபன் என்று அபிஷேக் கூறியதும் கடுப்பான சிபி உன் இஷ்டத்திற்கு ஏதோ பண்ற, அப்போ இங்கு இருக்குறவங்க எல்லாம் லூசு பயலா என்று சிபியும் அபிஷேக்கிடம் சண்டை போடுவதாக ப்ரோமோ வெளியாகி உள்ளது. நாமினேஷனிலிருந்து தப்பிக்க போட்டியாளர்கள் தீவிரமாக இந்த டாஸ்கை விளையாடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











