மூக்கை சிந்திட்டு அழுதுட்டு இருந்தாங்க.. அக்ஷராவை ஆக்ரோஷப்படுத்திய சிபி.. வேறலெவல் புரமோ!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி 53 நாட்களை வெற்றிகரமாக கடந்த நிலையில், 54வது நாளின் 2வது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
வார்டனாக இருந்த சிபிக்கும் மாணவியாக இருந்த அக்ஷராவுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்ற நிலையில், மீண்டும் அவர்களின் சண்டை தொடரும் புரமோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
இந்த வார டாஸ்க்கில் யார் எப்படி பர்ஃபார்மன்ஸ் பண்ணாங்க என்கிற கேள்விக்குத்தான் சிபி அக்ஷரா பற்றி சொல்ல மீண்டும் பிக் பாஸ் வீடு பற்றி எரிந்தது.

ஓவர் ஆக்டிங் சிபி
இந்த வாரம் நடிக்க சொன்னா ஓவர் ஆக்டிங் பண்ணது என்னை பொறுத்தவரையிலும் சிபி தான் என வார்டனாக இருந்த சிபி தன்னிடம் நடந்து கொண்டதை மனதில் வைத்துக் கொண்டு அக்ஷரா பேச சிபியும் அவருடைய வாய்ப்பை பயன்படுத்தி அக்ஷராவை வெளுத்து வாங்கி விட்டார்.

மூக்கை சிந்திட்டு
என்ன பொறுத்தவரையில் டவுட்டே இல்லை இந்த வாரம் அக்ஷரா தான் ஒழுங்காவே நடிக்கல. மூக்கை சிந்திட்டு சுட்டிக் குழந்தை மாதிரி ஒரு ஓரமாக உட்கார்ந்து அழுதுகிட்டே இருந்தாங்க என சிபி தனது வாய்ப்பை பயன்படுத்தி அக்ஷராவை மீண்டும் ஒரு முறை டேமேஜ் செய்து விட்டார்.

கடுப்பான அக்ஷரா
நீ பேசுறது ஒழுங்கா பேசு.. அழுதுகிட்டு இருந்தாங்கனுலாம் சொல்லாத என சிபி பேசும் போது தேவையில்லாமல் அக்ஷரா குறுக்கிட இருவருக்குள்ளும் சண்டை மேலும் தீவிரம் அடைந்தது. வருண், ராஜு எல்லாம் என்னப்பா இவங்க சண்டை இப்போதைக்கு முடியாது போல தெரியுதே என வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

சுட்டிக் குழந்தைக்கு அர்த்தம் தெரியாதா?
சுட்டிக் குழந்தைக்கு மீனிங் தெரியாதா உங்களுக்கு என சிபி மறுபடியும் அக்ஷராவை பார்த்து சீற இரண்டாவது புரமோ தீயாக இருக்கு. பிக் பாஸ் வீட்டின் பொருட்களை எல்லாம் போட்டு உடைத்து நாய் மாதிரி இருக்க முடியாது என வாய் விட்டு பிக் பாஸிடம் தனிப்பட்ட முறையில் திட்டு வாங்கிய அக்ஷரா சிபியிடம் இப்படி மீண்டும் சண்டை போடுவதை பார்த்த ரசிகர்கள் அடுத்த வாரம் எல்லாரும் உங்களை நாமினேட் பண்ணி வெளியே அனுப்ப போறாங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

விர்ச்சுவலாக கமல்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் சனிக்கிழமை எபிசோடுக்கான ஷூட்டிங் இன்று நடைபெற உள்ளது. கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனே விர்ச்சுவலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை இன்று தொகுத்து வழங்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











