கட்டிப்பிடிக்க சொல்லி கேட்ட பிரியங்கா...ரொமான்டிக் ஹீரோவாக மாறிய சிபி
சென்னை : அக்டோபர் 3 ம் தேதி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றோடு 78 நாட்களை நிறைவு செய்து விட்டது. நிகழ்ச்சி முடிய இன்னும் 4 வாரங்கள் மட்டுமே உள்ளது.
106 நாட்களைக் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஜனவரி 16 ம் தேதி நடக்கும் என கூறப்படுகிறது. இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டு, வைல்ட் கார்டு என்ட்ரியான இருவரையும் சேர்த்து தற்போது 10 பேர் வீட்டிற்குள் உள்ளனர்.

ஃப்ரீஸ் டாஸ்க்
நிகழ்ச்சி முடிய இன்னும் சில வாரங்களே உள்ளதால் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வரும் ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அம்மாவை பார்த்து அழும் அக்ஷரா
இதன் முதல் ப்ரோமோவில் டாஸ்க் புக்கை கத்தியபடி பிரியங்கா வாசிக்கிறார். ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட உள்ளதாக போட்டியாளர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அனைவரும் ஃபிரீஸ் என பிக்பாஸ் குரல் கேட்கிறது. அனைவரும் ஃபரீஸ் ஆகி இருக்க, அக்ஷராவின் அம்மாவின் குரல் கேட்க, அவர் கத்திக் கொண்டே ஓடிச் சென்று கதவின் அருகில் நின்று அம்மா இருக்கார் என கத்துகிறார்.

அடுத்து யாருடைய குடும்பம்
அம்மா மற்றும் அண்ணனை பார்த்து கட்டிப்பிடித்து அழுகிறார் அக்ஷரா. இதை பார்த்து சஞ்சீவ் ஏக்கமாக, நெகிழ்ச்சி பொங்க நிற்கிறார். இந்த ப்ரோமோ அனைவரையும் உற்சாகமடைய வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்து யாருடைய குடும்பம் வர போகிறது என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

மனைவியை பார்த்து ஷாக்காகும் சிபி
இதில் சிபி, கன்ஃபஷன் ரூமிற்குள் செல்கிறார். அங்கு அவரது மனைவியை பார்த்து ஷாக் ஆக, அவர் ஓடி வந்து சிபியை கட்டிப்பிடித்துக் கொள்கிறார். நீ மும்பை போய் விட்டதாக சொன்னார்களே என சர்ப்பிரைஸ் ஷாக்குடன் மனைவியிடம் கேட்கிறார் சிபி. பிறகு சிபி தனது மனைவியை, வீட்டிற்குள் அழைத்து வருகிறார். அங்கு மற்ற போட்டியாளர்கள் கைதட்டி, அவர்களை வரவேற்கிறார்கள்.

கட்டிப்பிடிக்க சொன்ன பிரியங்கா
மனைவியை பார்த்ததும் கட்டிப்பிடிக்கவில்லையா என சிபியிடம் கேட்கிறார் பிரியங்கா. பார்த்ததும் உள்ளேயே கட்டி பிடித்து விட்டேன் என்கிறார் சிபி. ஆனால் பிரியங்கா விடாமல், நாங்க எல்லோரும் பார்க்கவில்லை. இப்போது கட்டிப்பிடி என்கிறார். வெட்கப்பட்ட படி மனைவியை அனைவரின் முன்னிலையிலும் கட்டிப்பிடிக்கிறார் சிபி.
Recommended Video

ராஜு குடும்பம் எப்போ வரும்
இதைப் பார்த்து விட்டு ரசிகர்கள், ராஜு மற்றும் தாமரையின் குடும்பம் எப்போது வரும் என காத்துக் கொண்டிருக்கிறோம். குகு பாப்பாவ இந்த வாரம் வீட்டிற்கு அனுப்பி விடலாம். நன்றாக இருக்கும். பிரியங்கா எப்பவும் ஃபன் தான் என கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











