உன்ன மாதிரி சல்பின்னு விட முடியலையே.. ராஜுவிடம் ஃபீல் பண்ண சிபி.. அதுக்குத்தான் டைட்டிலா?

சென்னை: ஐந்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத சண்டையை போடுவதை விட்டுவிட்டு மிக்சர் நல்லா இருந்தா அதையே சாப்பிடலாமே என கூல் தத்துவத்தை சொன்னதில் இருந்தே ராஜு பாயை பலருக்கும் பிடித்து விட்டது.

அபிஷேக் ருத்ர தாண்டவம் ஆட போகிறேன் என சொல்லும் போது போய் குளிச்சிட்டு வா என்றும் பாவனி அபிநய் பற்றி பேச வந்த போது நான் போய் குளிச்சிட்டு வரேன் என ராஜு சொன்னது அனைத்தும் மீம்களாக மாறின.

கடைசியாக நிரூப்பை பார்த்து எல்லாம் சரியாகிடும் தம்பி என்று சொன்னதும் வைரலாகி வரும் நிலையில், ராஜுவை சக போட்டியாளரான சிபியே பாராட்டிய காட்சிகள் ராஜு பாய் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.

முதல்ல கவனிக்கணும்

முதல்ல கவனிக்கணும்

போன் கால் வந்ததும் தனக்குத்தான் தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு போனை எடுத்த நிரூப் பிக் பாஸ் என்ன சொன்னார் என்பதையே ஹவுஸ்மேட்களிடம் சொல்லி புரிய வைக்க முடியாமல் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களின் எதிர்ப்பையும் சம்பாதித்தார். ஆனால், எப்போதும் ஒரு பிரச்சனை நடக்கும் போது அங்கே என்ன பிரச்சனை நடக்கிறது என்பதை முதலில் கவனிக்க வேண்டும் இதை ராஜு தெளிவாக செய்து வருகிறார்.

சல்பி மேட்டர்

சல்பி மேட்டர்

நிரூப் டாஸ்க் ஆட வேண்டும் என குதிக்க அமீர், சிபி, பிரியங்கா எல்லாம் ஏன் பண்ணனும் என நிரூப்பை போட்டு மிதிக்க இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என ஒட்டுமொத்த கூச்சலையும் காம் ஆக்கிய ராஜுவை பார்த்து நீ சொல்றல இதெல்லாம் சல்பி மேட்டருன்னு அப்படியெல்லாம் என்னால இருக்க முடியலையே மச்சான் என சிபி பாராட்டித் தள்ளி விட்டார்.

சிபி பாராட்டு

சிபி பாராட்டு

ஒரே அணியில் இருந்தாலும் எதிர் அணியில் இருந்தாலும் சிபி தனக்கு பிடித்ததை பாராட்டவும் பிடிக்காததை எதிர்க்கவும் செய்து வருகிறார். ராஜு மூன்றாவது இடத்தில் நின்ற போது எதிர்த்த சிபி பிரச்சனையை சால்வ் செய்யும் விதமாக ராஜு பேசியதை பார்த்ததும் அதை மறைக்காமல் பாராட்டியது சிறப்பான விஷயம்.

கேப்டன் கூல்

கேப்டன் கூல்

இந்த பிக் பாஸ் சீசனில் வெடித்து சிதறும் பாப்கார்ன்களுக்கு மத்தியில் கேப்டன் கூல் தோனி போல இருக்கும் ராஜுவின் நல்ல குணத்தையும் மனப்பக்குவத்தையும் டைமிங் காமெடியையும் பார்த்தே ஏகப்பட்ட ரசிகர்கள் ஓட்டுப் போட்டு தொடர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிரியங்கா, இமான் அண்ணாச்சியை தெரிந்த அளவுக்கு கூட முன்னதாக மக்களுக்கு ராஜுவை தெரிந்திருக்காது என்பது தான் நிதர்சனமான உண்மை.

Recommended Video

Bigg Boss வீட்டை விட்டு வெளியேறிய CIBY | Ciby Walkout with 12 Lakhs | Ciby, Amir, Bigg Boss 5 Tamil
டைட்டில் வின்னர் ராஜு

டைட்டில் வின்னர் ராஜு

ராஜு பிக் பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகி விட்டார் என சிலர் வதந்திகளை பரப்பி வரும் நிலையில், தொடர்ந்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முதல் நபராக சேவ் ஆகி வரும் ராஜு தான் இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் டைட்டில் வின்னர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் டிவி என்ன முடிவை எடுத்திருக்கிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X