பிக் பாஸ் வீட்டில் இருந்து ரூ. 12 லட்சத்துடன் வெளியேறிய சிபி.. முதல் முதலாக வெளியிட்ட அசத்தல் பதிவு!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் ரூ. 12 லட்சத்துடன் இந்த வாரம் வெளியேறிய சிபி புவன சந்திரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள முதல் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஓகே கண்மணி படத்தில் சிறிய வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சிபி.
மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யின் மாண்புமிகு மாணவனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சினிமாவில் சிபி
கடந்த 2015ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி படத்தில் சிறிய வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சிபி. 2018ம் ஆண்டு வெளியான வஞ்சகர் உலகம் படத்தில் லீடு ரோலில் நடித்து அசத்தினார். தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஸ்ரீ எனும் கல்லூரி மாணவனாக நடித்து அசத்தினார். சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் சிபி சிறப்பான ரோலில் நடித்துள்ளார்.

சீசன் 5ன் சிங்கம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் சிங்கம் சிபி தான் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல் நாளில் இருந்து 95வது நாள் வரை ஸ்ட்ரெயிட் ஃபார்வர்டாகவும் தனக்கு நேர்மையாகவும் இருந்து விட்டு சிறப்பான விளையாட்டையும் விளையாடி விட்டு ஸ்மார்ட் மூவ் உடன் வெளியேறி உள்ளார்.

12 லட்சத்துடன் எஸ்கேப்
கவின், கேபியை போல பிக் பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் இந்த சீசனில் வெளியேறு உள்ளார் சிபி. அந்த எபிசோடை போடுவதற்கு முன்பே ரசிகர்களை சந்தித்த சிபியின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், முதன் முறையாக பிக் பாஸ் அனுபவங்கள் குறித்து சிபி போட்டுள்ள முதல் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமேசிங் ரைடு
என்னவொரு அமேசிங்கான ரைடு இது. இப்படியொரு வாய்ப்பை எனக்கு அளித்த பிக் பாஸ் குழுவுக்கும் விஜய் டிவிக்கும் டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கும் உலகநாயகன் கமல்ஹாசனுக்கும் என் மனமார்ந்த நன்றி என நடிகர் சிபி பிக் பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிய நிலையில், ட்வீட் போட்டுள்ளார்.

எல்லாரும் வின்னர் தான்
பிக் பாஸ் வீட்டில் இருந்த 95 நாட்களும் என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாட்களாக மாறிவிட்டன. என்னையும் இன்னும் கொஞ்சம் நல்ல மாதிரியக மாற்றின. சக ஹவுஸ்மேட்கள் அனைவருமே நல்ல இதயம் கொண்டவர்கள், அன்பானவர்கள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்திறமை கொண்டவர்கள். எல்லோரும் என்னை பொறுத்தவரையில் வின்னர் தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களுக்கு நன்றி
ஒவ்வொரு நாளும் உங்களின் ஆதரவு இல்லாமல் நாங்க பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியாது. நீங்க போட்ட ஒவ்வொரு ஓட்டுக்கும் நன்றி, ஒவ்வொரு ட்வீட்டுக்கும் நன்றி என சிபி பிக் பாஸ் ரசிகர்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்கள் அனைவருக்கும் 2022ம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











