இங்க இருக்குற யாரும் உங்களுக்கு அடிமை இல்லை.. அக்ஷராவின் கண்ணாடியாய் மாறி விளாசி தள்ளிய சிபி!
சென்னை: மாஸ்டர் பட நடிகர் சிபி பிக் பாஸ் வீட்டில் அக்ஷராவின் கண்ணாடியாக செயல்பட்டு வருகிறார்.
ஆரம்பத்தில் இருந்தே அமைதியாக இருந்த சிபி திடீரென பிசிக்கல் டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் ஆக்ரோஷமாக மாறினார்.
அதில், அக்ஷராவுக்கும் இவருக்கும் ஏற்பட்ட மோதல் இந்த கண்ணாடி டாஸ்க்கிலும் தொடர்ந்து கொண்டே வருகிறது.

அக்ஷராவின் கண்ணாடி
அக்ஷராவின் கண்ணாடியாக இருக்கவே தனக்கு பிடிக்கவில்லை என்றும் டாஸ்க் செய்ய வேண்டுமே என்கிற நிர்பந்தத்தில் தான் இதனை செய்கிறேன் என உச்சகட்ட கோபத்தில் சிபி சொன்னது ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்டுகளையும் ஷாக் ஆக்கியது. அக்ஷரா அழாத குறையாக அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தார்.

அடிமைகள் இருக்காங்க
வீக்கான போட்டியாளர் ஸ்ட்ராங்கான போட்டியாளர் என அக்ஷரா தான் டீம் பிரிக்கும் போது சொன்னார் என தொடர்ந்து சிபி அக்ஷரா மீது கமல் சார் முன்னாடியே பழி போட்டு வந்த நிலையில், அடுத்த பழியாக அக்ஷரா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தன்னுடைய நண்பர்களை கூட அடிமைகளாகத் தான் நினைப்பதாக சொன்னதாகக் கூறி மற்றவர்களிடம் இருந்தும் கூட அக்ஷராவை பிரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

மேனிபுலேட் பண்ணாதீங்க
கமல் சார் முன்பாக சிபி இதே குற்றச்சாட்டை முன் வைத்த போது கூட அக்ஷரா manipulate (கருத்துத் திணிப்பு) பண்ணாதீங்க என சொல்லியிருந்த நிலையில், சிபிக்கு அக்ஷரா பற்றி பேச வேறு எந்த கருத்தும் இல்லாத நிலையில், திரும்ப திரும்ப அந்த பாயின்ட்டையே முன்வைக்க இதுக்கு பேர் தான் manipulate என அக்ஷரா சிபியை பார்த்து சொல்லி விட்டார்.

யாரிடமும் பேச மாட்டேன்
ஆனால், அக்ஷரா இந்த வீட்டை விட்டு வெளியே போய் விட்டால் யாருடனும் தான் எந்தவொரு தொடர்பையும் வைத்துக் கொள்ள மாட்டேன், நட்பு பாராட்ட மாட்டேன் என சொன்ன வீடியோவை ஷேர் செய்து அக்ஷரா இந்த வீட்டில் பலருடன் சோஷியல் டிஸ்னஸ்சிலேயே பழகி வருகிறார் என்றும் வருணை கூட தனக்கான அடிமையாகவே அவர் பயன்படுத்துவதாகவும் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

அழுவாரா அக்ஷரா
சிபி பேசியதால் மனம் வாடிப் போன அக்ஷரா மறுபடியும் அழுவாரா என்றும் இல்லை அழுததை கட் செய்து விட்டனரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சிபி மாதிரி அக்ஷரா என்னலாம் செய்யப் போகிறார் என்பதை பார்க்கவும் பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











