சிபியை அலேக்காக தூக்கிய மனைவி.. கூட்டத்தில் அந்த விஷயத்தை சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்களே!
சென்னை: அக்ஷரா குடும்பத்தை அடுத்து சிபியின் அப்பா மற்றும் மனைவி பிக் பாஸ் வீட்டுக்குள் ஃப்ரீஸ் டாஸ்க்கில் நுழைந்தனர்.
Recommended Video
முதலில் சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ் டா பாடலுடன் மெயின் கேட் வழியாக சிபியின் அப்பா அகஸ்டின் காமராஜ் வீட்டுக்குள் நுழைந்தார்.
அடுத்ததாக சர்ப்ரைஸ் கிஃப்டாக கன்ஃபெஷன் ரூமில் இருந்து சிபியின் மனைவி ஸ்லோகா கலக்கல் என்ட்ரி கொடுத்தார்.

குடும்ப வாரம்
பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மிகவும் பிடித்ததும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு அழுகாச்சி சீரியலாகவும் இருக்கப் போகும் ஃப்ரீஸ் டாஸ்க் நிறைந்த இந்த குடும்ப வாரம் ஆரம்பமாகி உள்ளது. ஆரம்பத்திலேயே அக்ஷராவின் அம்மாவும் அண்ணனும் வீட்டிற்குள் வந்து சென்ற நிலையில், இரண்டாவதாக சிபியின் அப்பா மற்றும் மனைவி உள்ளே வந்தனர்.

சிபியின் அப்பா
தான் எதை செய்தாலும் தனக்கு முழு ஆதரவு அளிக்கும் மனிதர் என் அப்பா என தனது சொந்த கதை டாஸ்க்கின் போது சிபி சொல்லி இருந்தார். அந்த வார்த்தைகளுக்கு உருவம் கொடுத்ததை போலவே சிபியின் அப்பா அகஸ்டின் காமராஜ் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து அனைவரிடமும் அன்பாக பேசி பழகினார்.

கன்ஃபெஷன் ரூமில் பரிசு
என்னடா அப்பா மட்டுமே வந்திருக்காரே என நினைத்துக் கொண்டிருந்த சிபிக்கு கன்ஃபெஷன் ரூமில் ஒரு பரிசு காத்திருக்கு என அப்பா புதிர் போட அப்பாவிடம் பேச கிடைத்த கொஞ்ச நேரத்தையும் கன்ஃபெஷன் ரூமிற்கு சென்று வீணடிக்க வேண்டுமா என நினைத்துக் கொண்டே கன்ஃபெஷன் ரூமிற்கு சென்ற சிபிக்கு அவரது மனைவி ஸ்லோகா அங்கிருந்தது ஷாக்கிங் சர்ப்ரைஸ் தான்.

வெட்கப்பட வைத்த பிரியங்கா
பிரியங்காவின் குடும்பம் மட்டும் இல்லை எந்த போட்டியாளரின் குடும்பம் வந்தாலும் அதிகம் பேசுவது பிரியங்கா தான் என்பது போலவே இருக்கிறது. கன்ஃபெஷன் ரூமிலேயே பார்த்த உடனே மனைவியை சிபி ஹக் பண்ண நிலையில், பொதுவெளியில் பப்ளிக்காக கட்டிப்புடி நாங்க எல்லாரும் பார்க்கணும் என சொல்லி சிபி புவன சந்திரனை பிரியங்கா வெட்கப்பட வைத்துவிட்டார்.

அந்த விஷயம்
இருவர் மனதுக்கு பிடித்த விட்ட பிறகும் கூட என்னை தொட ஒரு வாரம் பயந்தார் என சிபியின் அந்த விஷயத்தை நிரூப்பிடம் சிபியின் மனைவி ஓப்பன் பண்ண நிரூப் உடனே பிரியங்காவுக்கு சொல்ல ஒட்டுமொத்த பிக் பாஸ் ஹவுஸுக்கும் அது தண்டோரா அடிக்கப்பட்டு சொல்லப்பட்டு விட்டது.

அலேக்கா தூக்கிட்டாங்க
அதுமட்டுமின்றி சிபி தன்னை தூக்கவே மாட்டார் என்றும் நான் அவரை தூக்கி விடுவேன் என சிபியின் மனைவி கூற அக்ஷரா உள்ளிட்டோர் ப்ளீஸ் தூக்குங்க என கோரிக்கை வைக்க உடனடியாக அலேக்காக சிபியை அவரது மனைவி தூக்கிய காட்சிகள் இந்த சீசன் ப்ரீஸ் டாஸ்க்கின் மறக்க முடியாத தருணமாக மாறிவிட்டது. பதிலுக்கு சிபி அவரது மனைவியை தூக்கி இருந்தால் நல்லா இருந்திருக்கும்.


Click it and Unblock the Notifications











