தாமரைக்காக டிரான்ஸ்லேட்டராக மாறிய பிரியங்கா.. சிபி மனைவி யார் ஜெயிக்கணும்னு சொன்னாங்க தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் வீட்டுக்குள் ஃப்ரீஸ் டாஸ்க்கில் என்ட்ரி கொடுத்த சிபியின் மனைவி ஸ்லோகா இந்த பிக் பாஸ் டைட்டிலை தாமரை வின் பண்ண வேண்டும் என்று கூறியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதிகமாக சிபியின் மனைவி ஆங்கிலத்தில் பேசியது புரியாமல் தவித்துக் கொண்டிருந்த தாமரைக்கு பிரியங்கா தான் பக்காவாக டிரான்ஸ்லேட் செய்து புரிய வைத்தார்.
பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருத்தர் பற்றியும் சிபியின் மனைவி சொல்ல சொல்ல அங்கிருந்து அவரை அழைத்துச் செல்லும் முனைப்பையே சிபி காட்டியது தான் ஹைலைட்.

மனைவியுடன் பேச ஆசை
முதலில் அப்பா மட்டுமே வந்து விட்டாரே மனைவி வர வில்லையோ என தவித்துக் கிடந்த சிபிக்கு மனைவியின் எதிர்பாராத என்ட்ரி அவரை திக்குமுக்காட செய்தது. ஆனால், பிரியங்கா மற்றும் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் இருவரையும் சுற்றி நின்று கொண்டு தனிமையில் பேச விடாமல் தடுத்தது போலவே சிபி உணர ஆரம்பித்தார்.

எப்படி விளையாடுறேன்
கடந்த சீசனில் பிக் பாஸ் டைட்டில் வின்னரான ஆரி தனது மனைவியிடம் வெளியே நடக்கும் எதையும் சொல்லாதே என சொல்வார். ஆனால், நம்பர் ஒன் இடத்தில் தானே ஏறி போய் நின்று கொண்ட சிபி தன்னை பற்றி வெளியே என்ன பேசிக்கிறாங்க, எப்படி விளையாடுகிறேன் உள்ளிட்ட கேள்விகளை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்.

போட்டியாளர்கள் பற்றி
அக்ஷராவை நடமாடும் பார்பி டால் என்றும் பாவனியை எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் ராஜுவிடம் இருந்து கோபத்தை அடக்கும் திறமையை சிபி கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தாமரையிடம் இருந்து சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும். வீட்டில் சிபி சமையல் பக்கமே வர மாட்டான். நீங்க நல்லா சொல்லித் தறீங்க என ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் சொன்ன ஸ்லோகா தனக்கு ரொம்ப பிடித்த போட்டியாளர் என்றால் அது சிபிக்கு பிறகு பிரியங்கா தான் என்றும் இருவரும் பெங்களூருகாரங்க என்பதையும் போட்டு உடைத்தார்.

டிரான்ஸ்லேட்டர் பிரியங்கா
சிபியின் மனைவி அதிகமாக ஆங்கிலத்தில் பேச என்ன பேசுகிறார் என்று ஒன்றுமே புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த தாமரைக்கு உதவும் வகையில் டிரான்ஸ்லேட்டராக மாறி பிரியங்கா ஒவ்வொன்றையும் எடுத்துக் கூறி தாமரை பற்றி ஸ்லோகா எப்படி சொன்னார் என்பதையும் பல பெண்களுக்கு தாமரை ஒரு உதாரணமாக இருப்பதையும் எடுத்துச் சொல்ல தாமரை சந்தோஷமடைந்தார்.
Recommended Video

தாமரை ஜெயிக்கணும்
கணவர் சிபியை கேஜிஎஃப் ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தியும் மற்றும் சிபிக்கு அடுத்ததாக பிரியங்காவை பிடிக்கும் என்றும் சொன்னாலும், கடைசியாக போகும் போது நீ வின் பண்ணிட்டு வா என தாமரையிடம் ஸ்லோகா சொல்ல என்னை கூட அப்படி இவ சொல்லல என சிபி தாமரையிடம் சொல்ல கட்டியணைத்து முத்தம் ஒன்றையும் ஸ்லோகாவுக்கு கொடுத்து அனுப்பினார் தாமரை. இந்த சீசன் டைட்டிலை தாமரை வின் பண்ண அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











