CID Sakunthala death: 84 வயது.. மகள் வீட்டில் மறைந்த சிஐடி சகுந்தலா.. திரையுலகுக்கு பேரிழப்பு!

சென்னை: சிஐடி சகுந்தலா என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை சகுந்தலா உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84. ஜெய்சங்கர் நடித்த சிஐடி சங்கர் படத்தில் நடித்து மிரட்டிய சகுந்தலாவை ரசிகர்கள் சிஐடி சகுந்தலா என்றே அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

சேலத்தில் இருந்து சென்னைக்கு நாடகங்களில் நடிக்கும் கனவுடன் வந்த சகுந்தலாவுக்கு லலிதா, பத்மினி, ராகினி உள்ளிட்டோரின் நாடக சபாவில் இடம் கிடைத்தது. அங்கிருந்து அவர்களை போலவே இவரும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

cid sakunthala death heroine

1960ம் ஆண்டு வெளியான கைதி கண்ணாயிரம் படத்தில் நடனக் கலைஞராக சினிமாவில் நுழைந்தார் சகுந்தலா. அதே ஆண்டு வெளியான சிவாஜியின் படிக்காத மேதை படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.

நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்: சினிமாவில் இருந்து விலகி சீரியல்களில் நடித்து வந்த சகுந்தலா கடந்த சில ஆண்டுகளாக நடிப்பதை விட்டு விட்டு பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், திடீரென நேற்று இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்து விட்டது. பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலாவுக்கு 84 வயது.

சிஐடி சங்கர்: படிக்காத மேதை, கை கொடுத்த தெய்வம், கார்த்திகை தீபம், நினைவில் நின்றவள் என பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சகுந்தலாவுக்கு 1970ம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான சிஐடி சங்கர் திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. சிஐடி சகுந்தலா என்றே அந்த படத்திற்கு பின்னர் அழைக்கப்பட்டார்.

ஏகப்பட்ட படங்கள்: திருமலை தென்குமரி, வசந்த மாளிகை, அகத்தியர், தவப்புதல்வன், பாரத விலாஸ், தெய்வப்பிறவி, வேலைக்காரன் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.

டிவி தொடர்களில்: 1999ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான குடும்பம் சீரியலில் நடிக்க ஆரம்பித்த அவர் பல தொலைக்காட்சி தொடர்களில் அம்மாவாகவும், மாமியாராகவும், பாட்டியாகவும் நடித்தார். கடைசியாக 2019ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தமிழ்ச்செல்வி தொடர் வரை இவர் நடித்துள்ளார்.


பிரபலங்கள் இரங்கல்: பழம்பெரும் நடிகையான சிஐடி சகுந்தலாவின் மறைவு ஏகப்பட்ட சினிமா பிரபலங்களை கலங்க வைத்துள்ளது. சீனியர் நடிகைக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தென்னிந்திய ரசிகர்களும் சிஐடி சகுந்தலாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X