Don't Miss!
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 1202 வேட்பாளர்கள்..15.88 கோடி வாக்காளர்கள்;1.67 லட்சம் வாக்குச் சாவடிகள்!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'சிண்ட்ரெல்லா' ... ஒரே டேக்கில் உருவான ஸ்னீக் பீக்… எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டார்!
சென்னை: உலகெங்கும் தேவதைக் கதைகளில் வலம் வரும் புகழ்பெற்ற பெயர் 'சிண்ட்ரெல்லா'. இந்தப் பெயரில் தமிழில் ஒரு திகில் பேய்ப் படம் உருவாகி இருக்கிறது.
ராய்லட்சுமி பிரதான வேடம் ஏற்றிருக்கும் இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இவர் எஸ் .ஜே .சூர்யாவிடம் பணிபுரிந்து சினிமா கற்றவர்.
சம்மரில் வெளிவரவுள்ள விஜய்சேதுபதியின் 4 படங்கள்!
இந்தப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை இயக்குநர் எஸ் .ஜே. சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
ஸ்னீக் பீக்
இந்த வீடியோ காட்சி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரே ஷாட்டில் படமாகி ஸ்னீக் பீக் காட்சி வெளியாவது இதுவே முதல் முறையாகும். மிரட்டும் பி ஜி எம் பார்ப்பவர்களை மிகவும் பிரமிக்கவைக்கும் என்று இந்த படத்தின் குழு மிகவும் பெருமையாக சொல்லி வருகிறது .
ஆடைகளைக் களைந்து
"இப்போது சாதாரணமாக எல்லாரும் 'ஸ்னீக் பீக்' கள் வெளியிடுகிறார்கள். நாம் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று ஒரே ஷாட்டில் எடுக்க முயற்சி செய்தோம். அதில் வெற்றியும் பெற்றோம். இக்காட்சி அப்படியே படத்தில் வருகிறது. ராய்லட்சுமி ஆடைகளைக் களைந்து விட்டு ஓடுவது போலவும் களையப்பட்ட அந்த ஆடை அமானுஷ்யமாக எழுந்து அசைந்து சுழன்று வருவது போலவும் வரும் அந்தக்காட்சி நிச்சயம் ரசிகர்களுக்குப் புதிய சிலிர்ப்பான அனுபவமாக இருக்கும்.
ட்விட்டர் பக்கத்தில்
இதை நாங்கள் ஒரே ஷாட்டில் எடுத்தோம். இந்த முயற்சியை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மிகவும் ரசித்துப் பாராட்டினார். ஸ்னீக் பீக்கைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தினார்" குருவே சிஷ்யனை பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சியான தருணம் .
இமேஜை உடைக்கும்
" இது ஒரு பேய்ப் படம் தான். ஆனால் பேய்ப் படங்களுக்கான வழக்கமான பாணியில் இருந்து விலகி ஒரு விறுவிறுப்பான படமாக உருவாகி இருக்கிறது. ராய் லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள இமேஜை உடைக்கும் படி இருக்கும். அவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவரை ஒரு கவர்ச்சிப் பதுமையாகப் பார்த்த ரசிகர்களுக்கு தோற்றத்திலும் நடிப்பிலும் மாற்றம் கொண்டதாக இருக்கும். நல்ல நடிப்பில் அவருக்கு உரிய இடத்தை பெற்றுத்தரும் படமாக 'சிண்ட்ரெல்லா' இருக்கும் என்றார்
வில்லி பாத்திரம்
சாக்ஷி அகர்வால் ஏற்றுள்ள வில்லி பாத்திரம் யாரும் எதிர்பாராத பரபரப்புடன் இருக்கும். இவர்கள் தவிர ரோபோ சங்கர், 'கல்லூரி' வினோத் , பாடகி உஜ்ஜயினி , கஜராஜ், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 'காஞ்சனா 2' படத்திற்கு இசை அமைத்த அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் 'லட்சுமி என்டிஆர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் விரைவில் 'சிண்ட்ரெல்லா ' வெளியாக உள்ளது.