நாங்களும் மரம் நட்டோம்... லாக்டவுனில் அசத்திய திரை பிரபலங்கள்
சென்னை : கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புக்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

லாக்டவுனில் வீட்டில் ஓய்வில் இருக்கும் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த சினிமா பிரபலங்கள் பலவிதங்களில் பொழுதை செலவிட்டு வருகின்றனர். நடிகைகள் சிலர் கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை தங்களின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர் ஒர்க்அவுட் செய்து உடல் அழகை பராமரித்து வருகின்றனர். நடிகைகள் சிலர் சமையல், தோட்ட பராமரிப்பு, வீட்டு பராமரிப்பு, செல்ல பிராணிகளுடன் கொஞ்சி விளையாடுவது, குடும்பத்தினருடன் செலவிடுவது என பொழுதை கழித்து வருகின்றனர்.

நடிகைகள் மட்டுமின்றி, நடிகர்கள் பலரும் தோட்ட பராமரிப்பு, குடும்பத்துடன் செலவிடுவது என பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் நேற்று மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இந்த ஃபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
விஜய், சூர்யா, அல்லு அர்ஜுன், துல்கர் சல்மான், ரகுல் பரீத் சிங், ஸ்ரத்தா கபூர், நாகர்ஜுனா, கீர்த்தி சுரேஷ், மகேஷ்பாபு, பிரபாஸ், கேத்ரின் தெரசா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா சர்மா, ராம் சரண் உள்ளிட்டோர் தங்களின் வீட்டு தோட்டம் மற்றும் வீட்டின் அருகில் உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











