»   »  கன்னட திரையுலகை எதிர்த்து போராட்டம்!

கன்னட திரையுலகை எதிர்த்து போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

தமிழ்ப் படங்களைத் திரையிட விடாமல் தடுத்து வரும் கன்னட திரையுலகினரைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக தென்னிந்தியதிரைப்பட வர்த்தக சபைத் துணைத் தவைரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தமிழக மக்கள் திருப்தி அடையவில்லை. இருந்தாலும்,முதல்வர் கருணாநிதி, இத்தீர்ப்பு குறித்து சரியான அணுகு.றையுடன் செயல்படுவார் என்பதால் தமிழ்த் திரையுலகினரும், பொதுமக்களும் அமைதிகாத்து வருகிறோம்.

ஆனால், கர்நாடக நடிகர், நடிகையர், தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், அனைத்துக் கட்சியினரும் இணைந்து ஊர்வலங்கள்,ஆர்ப்பாட்டம், கடையடைப்பு என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காவிரிப் பிரச்சினை வரும்போதெல்லாம் தமிழர்களைத் தாக்குவதும், தமிழ்ப் படங்களைப் போடும் தியேட்டர்களை அடித்து நொறுக்குவதும்,தடுப்பதும் வாடிக்கையாகி விட்டது.

எனவே தமிழகத்திற்குத் தண்ணீர் தராமல், அடாவடி செய்யும் கர்நாடகத் திரையுலகினர், தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையில் இடம் பெறக்கூடாது. வருகிற 20ம் தேதி நடைபெறவுள்ள வர்த்தக சபை செயற்குழுக் கூட்டத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த யாரும் கூட்டத்திற்கு வரக் கூடாது.

மீறி வந்தால் எனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன். வர்த்தக சபைக்கு சொந்தமான சொத்துக்களில் கன்னடத்திரையுலகினருக்கு எந்தப் பங்கும் தரக் கூடாது என்று கோரி போராட்டம் நடத்துவேன் என்று கூறியுள்ளார் ராஜன்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos