»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் திரைப்பட நடிகர்கள் - தயாரிப்பாளர்கள் இடையே இருந்து வந்த பிரச்சனைமுடிவுக்கு வந்தது. வெள்ளிக்கிழமை முதல் வழக்கம் போல் படப்பிடிப்பு தொடங்கும்என அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் எடுக்கும் செலவை குறைக்க தயாரிப்பாளர்கள் பல முடிவுகளை எடுத்தனர்.இதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு நடிகர், நடிகைகளுக்கிடையே எதிர்ப்புகிளம்பியது. இதனால் 47 நாட்களாக எந்த புதுப் படத்திற்கும் பூஜைபோடப்படவில்லை. படபிடிப்பும் நடை பெறாமல் இருந்து வந்தது.

தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அ.செ. இப்ராகிம் ராவுத்தரும்,நடிகர் சங்க செயலாளர் சரத்குமாரும் இணைந்து வியாழக்கிழமை கூட்டறிக்கைஅளித்துள்ளனர்.

அறிக்கை விவரம்:

தென்னிந்திய நடிகர் சங்க அங்கத்தினர்களுக்கும், தயாரிப்பாளர் சங்கத்தினர்களுக்கும்இடையே நடைபெற்ற கூட்டத்தில் பல நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.தயாரிப்பாளர்கள் கூறிய பல நல்ல கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

குறிப்பிட்ட 5 கதாநாயக நடிகர்களுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுக்கப்படும் எனகூறியது பல கலைஞர்களை புண்படுத்தியிருக்கிறது. யாரையும் புண்படுத்தும்நோக்கத்துடன் தயாரிப்பாளர்கள் பேசவில்லை.

நடிகர், நடிகைகளை தயாரிப்பாளர்கள் சகோதர, சகோதரியாகத்தான் பாவிக்கிறோம்.சகோதர, சகோதரிகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு போன்றதுதான் அந்தநிகழ்ச்சி.

தற்போது கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.தாயரிப்பாளர், நடிகர் - நடிகை இடையே ஏற்படும் கால்ஷீட், சம்பளப் பிரச்னையைதீர்க்க ஒவ்வொரு தரப்பிலிருந்தும் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கம் சார்பில், அ.செ.இப்ராஹிம் ராவுத்தர், கோவைத்தம்பி,ஏ.எல்.அழகப்பன், சித்ரா லட்சுமணன், அன்பாலயா பிரபாகரன், கே. முரளிதரன்,பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜயகுமார், ஆர்.கே. செல்லவமணி, புஷ்பாகந்தசாமி, கே.எஸ்.சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நடிகர் சங்கம் சார்பில், விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன், ராதாரவி, நாசர்,பார்த்திபன், பிரபுதேவா, முரளி, சத்யராஜ், ரேவதி, கே.என்.காளை, பிரகாஷ்ராஜ்,வடிவேலு, விஜயகுமார், விவேக்,தியாகராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் திரையுலகில் ஏற்படும் பிரச்னை குறித்து பேசி முடிவெடுப்பார்கள் எனஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்னைகள் முடிவுக்கு வந்து விட்டதால் இனி படப்பிடிப்பை தொடங்கலாம். ஆனால்புதிய படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள்.தயாரிப்பாளர் சங்கத்தோடு தொடர்புகொண்டு புதிய தயாரிப்பு விவரங்கள் குறித்து அதற்கென அமைக்கப்பட்டுள்ளகுழுவில் தெரிவிக்க வேண்டும்.

பரிசீலனை குழு பரிசீலித்து ஒப்புதல் அளித்த பின் அந்த ஒப்புதல் கடிதங்களை கலர்லேபில் கொடுத்து தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த ஒப்புதல் இல்லாமல் புதிய படங்கள் தொடங்க வேண்டாம் என தயாரிப்பாளர்கள்வலியுறுத்தப்படுகிறார்கள் என தயாரிப்பாளர் சங்க அறிக்கை ஒன்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more about: chennai cinema tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil