»   »  உதவி இயக்குநர், கேமராமேன் குளத்தில் மூழ்கி பலி: ஆந்திராவுக்குப் போன இடத்தில் சோகம்!

உதவி இயக்குநர், கேமராமேன் குளத்தில் மூழ்கி பலி: ஆந்திராவுக்குப் போன இடத்தில் சோகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திராவிற்கு சுற்றுலா சென்ற தமிழ் சினிமா இயக்குநர், கேமராமேன் ஆகியோர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் அருகே உள்ள சதாசிவ கோனேவில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. நீர்வீழ்ச்சி, இயற்கை எழிலுடன் உள்ள இந்த வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சினிமா குழுவினர் படப்பிடிப்பு நடத்துவார்கள்.

Cinema AD and cameraman drowned in pond

சென்னையைச் சேர்ந்த சினிமா குழு நண்பர்கள் 6 பேர் சதாசிவ கோனேவுக்கு சுற்றுலா சென்றனர். இவர்களில் போரூரைச் சேர்ந்த காமிராமேன் பிரேம், உதவி இயக்குனர் விக்னேஷ் (24), தீபன், மதன், நவீன், சுகுமார் ஆகியோருடன் சதாசிவ கேனேவுக்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள விடுதியில் அறை எடுத்து 2 நாள் தங்கினார்கள்.

திங்கட்கிழமையன்று அவர்கள் சென்னை திரும்ப முடிவு செய்து புறப்பட்டனர். வழியில் உள்ள குளத்தில் இறங்கி குளித்தனர். இதில் நீச்சல் தெரியாத பிரேம், விக்னேஷ் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

வடமாலைபேட்டை காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு தண்ணீரில் மூழ்கிய பிரேம், விக்னேஷ் இருவரின் சடலத்தை மீட்டனர். அவர்களின் உடல் உடனடியாக புத்தூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுற்றுலா சென்ற இடத்தில் சினிமா உதவி இயக்குநரும், கேமராமேனும் உயிரிழந்த சம்பவம், திரைப்பட துறை வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A cinema assistant director and a cameraman were drowned in Andhra during a shooting

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil