சசிகுமார் மைத்துனர் தற்கொலை.. திரையுலகினர் இரங்கல்!

கந்துவட்டி கொடுமையால் நடிகர் சசிகுமாரின் மைத்துனர் தற்கொலை செய்து கொண்டதற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

சசிகுமார் மைத்துனர் தற்கொலை.. திரையுலகினர் இரங்கல்!- வீடியோ

சென்னை: கந்துவட்டி கொடுமையால் நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், கம்பெனி புரடெக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளருமான அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

டிவிட்டரில் இரங்கல்

டிவிட்டரில் இரங்கல்

ராயப்பேட்டை மருத்துவமனையிலேயே அவரது உடலுக்கு ஏராளமான திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகர் சித்தார்த்து, இயக்குநர் கவுதம் மேனன் ஆகியோர் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சித்தார்த் இரங்கல்

இதுதொடர்பாக நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
நிதிச்சுமை காரணமாக ஒரு இளைஞனின் மரணம் நிகழ்ந்திருப்பதைக் கேட்க மிகவும் வேதனையாக உள்ளது என தெரிவித்துள்ளர். தமிழ் சினிமா அத்தகைய கடன்களால் நிரம்பியிருக்கிறது, ஆனால் உலகம் முழுவதும் பொய்யான வெற்றி மற்றும் புகழுமே தெரிகிறது. முழு அமைப்பையும் மாற்ற வேண்டும். விவசாயி அல்லது திரைப்பட தயாரிப்பாளர், தற்கொலை என்பது ஒரு சாபம். சசிகுமார் மற்றும் குடும்பத்தினர் ஆகியோருக்கு இரங்கல்கள் என நடிகர் சித்தார்த் தனது டிவிட்டில் கூறியுள்ளார்..

பணப்பிசாசை அடக்கப் பயன்படக்கூடும்

இதேபோல் அசோக்குமாரின் மரணத்துக்கு இயக்குனர் கவுதம் மேனனும் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அசோக் உன்னுடைய மரணம் ஈவிரக்கம் அற்ற ஒரு பணப்பிசாசை அடக்கப் பயன்படக்கூடும் என்பதை அறிவேன்... ஆனால்... நீ உயிரோடிருந்து இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்பியிருப்போம்... என்று கவுதம் மேனன் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

துயரங்கள் களையப்படவேண்டும்

அசோக்குமார் தற்கொலை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தஜனும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் திரைத்துறை அசோக்குமார் கந்துவட்டி தொல்லைரராயால் தற்கொலை வருத்தம் அளிக்கிறது திரைத்துறையின் துயரங்கள் களையப்படவேண்டும் தீர்வுகள் காண முயற்சிப்போம்.. என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X