twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா கஷ்டமான தொழிலாகிவிட்டது..!- முக்தா சீனிவாசன்

    By Shankar
    |

    சென்னை: முன்பு நல்ல தொழிலாக இருந்த சினிமா இப்போது சூதாட்டமாகிவிட்டது, என்று மூத்த இயக்குநர் - தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் கூறினார்.

    புதுமுகங்கள் சித்து-சஞ்சிதா படுகோனே நடிக்கும் 'மன்னிப்பாயா' படத்தின் தொடக்க விழா, சென்னை வடபழனியில் உள்ள கிரீன்பார்க் ஓட்டலில் நேற்று நடந்தது.

    விழா அழைப்பிதழை அப்படியே மேடையில் மெகா பேனராக்கியிருந்தனர். அதில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் போன்ற சாதனை நாயகர்கள், நாயகிகள் படங்கள் இடம்பெற்றிருந்தன. நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த மேடை அமைக்கப்பட்டிருந்தது.

    Mukta Srinivasan
    விழாவில், தயாரிப்பாளரும், இயக்குநருமான முக்தா வி சீனிவாசன் பேசுகையில், "நான், சினிமாவுக்கு வந்து 65 வருடங்கள் ஆகின்றன. 1947-ல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்திடம் உதவியாளராக சேர்ந்து, கிளாப் போர்டு அடிக்க தொடங்கினேன். தொடர்ந்து 10 வருடங்கள் கிளாப் போர்டுதான் அடித்துக் கொண்டிருந்தேன். 1957- ம் வருடம், 'முதலாளி' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனேன். அதன் பிறகு தயாரிப்பாளராக, இயக்குநராக பல படங்களை கொடுத்தேன்.

    சினிமா, இப்போது சூதாட்டம் ஆகிவிட்டது. அந்தக்கால சினிமா இப்போது இல்லை. அப்போது சினிமாவுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. நல்ல தொழிலாக இருந்தது. இப்போது சினிமா கஷ்டமான தொழிலாகி விட்டது. இந்த சூழ்நிலையில், புதிதாக படம் தயாரிப்பவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

    இந்தப் படத்தை ராஜன் என்பவர் இயக்குகிறார். விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பி.எல்.தேனப்பன், தயாரிப்பாளர் 'பட்டியல்' சேகர், படத்தின் கதாநாயகன் சித்து, கதாநாயகி சஞ்சிதா படுகோனே, ஒளிப்பதிவாளர் ஜி.செல்வகுமார், இசையமைப்பாளர் ஏ.ஜி.மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

    English summary
    Veteran film maker Mukta Srinivasan says that making cinema became bad game nowadays.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X