twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒளியின் நாயகன் பாலு மகேந்திரா.. காட்சி பேழையின் ஹீரோ நினைவு நாள் இன்று!

    By staff
    |

    சென்னை: பாலுமகேந்திராவின் நினைவு நாளான இன்று அவரை நினைவு கூர்ந்த திரை பிரபலங்கள் அவர் குறித்த நினைவலைகளை பகிர்ந்துள்ளனர்.

    பாலுமகேந்திரா எனும் பெயர் தமிழ் சினிமாவை பல வருடங்களாக ஆண்டு வந்தது. இன்று அவரது சீடர்களால் ஆளப்பட்டு வருகிறது.

    கோகிலா என்ற கன்னட படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பாலு மகேந்திரா. இவர் ஒரு ஒளிப்பதிவாளரும் கூட, தமிழ் சினிமாவில் அழியாத கோலமாய் திகழ்கிறார் பாலு. இவரது படங்கள் அனைத்தும் காவியம் என்று தான் பலரால் போற்றப்படுகின்றது. இன்று முன்னணி இயக்குனர்களாக இருக்கும் ராம், வெற்றி மாறன், பாலா, சீனு ராமசாமி ஆகியோர் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் இருந்து வந்தவர்கள் தான். பல விருதுகளை இயக்கத்திற்காகவும் ஒளிப்பதிவிற்காகவும் இவர் பெற்றுள்ளார். இவரது கேமரா ஆங்கிள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும் அந்த அளவிற்கு பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு இருந்தது.

    அன்னைக்கு அப்படி சொன்னாங்களே... சினிமா 'ரிடையர்மென்ட்' பற்றி நடிகை சமந்தா திடீர் விளக்கம்அன்னைக்கு அப்படி சொன்னாங்களே... சினிமா 'ரிடையர்மென்ட்' பற்றி நடிகை சமந்தா திடீர் விளக்கம்

    இயக்குனர் சேரன்

    தனது படங்களால் சமூகத்திற்கு ஒரு கருத்தை எப்போதும் கூறுபவர் தான் சேரன். இவர் சிறந்த படத்திற்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். இவரது படங்கள் அனைத்தும் வித்தியாசமானவை தியேட்டர்களுக்கு அனைவரையும் வரவழைத்த ஒரு இயக்குனர் என்றால் அது சேரன் தான் இவர் படங்கள் என்றால் விரும்பி செல்வர் ரசிகர்கள். இவர் இன்று பாலு மகேந்திராவை நினைவு கூர்ந்துள்ளார்.

    தயாரிப்பாளர் தனஞ்செயன்

    தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் தனஞ்செயன். தமிழ் சினிமாவில் இவரை தெரியாத நபர்களே இல்லை. இவர் படங்களை விமர்சனம் செய்வதில் ஜெகஜால கில்லாடி என்று பலரும் கூறுவர்.

    சுரேஷ் காமாட்சி

    தமிழ் சினிமாவில் ஒரு யதார்த்தமான படத்தை வழங்கக்கூடிய இயக்குனர். இவர் இயக்கிய மிக மிக அவசரம் திரைப்படம் பலரது பாராட்டுக்களை பெற்றது. கடந்த வருடத்தின் சிறந்த படமாகவும் அமைந்தது இவரும் இன்று பாலு மகேந்திரா நினைவை பகிர்ந்துள்ளர்.

    இயக்குனர் சீனு ராமசாமி

    பாலு மகேந்திரா சினிமா பட்டறையில் இருந்து கண்டெடுத்த முத்து. தனது படங்களால் ரசிகர்களை ஈசியாக கவரக்கூடியவர் இவர் கிராமியம் கலந்த திரைப்படங்கள் எடுப்பதில் வல்லவர். விஜய் சேதுபதிக்கு "மக்கள் செல்வன்" என்ற பட்டத்தை வழங்கியவர். பாலு மகேந்திராவிடம் பயின்றதை தற்போது வெளிபடுத்தி ரசிகர்களை மகிழ்விப்பவர். இன்று தனது குருவை நினைத்து மூன்றாம் பிறையில் வரும் பாடலை பதிவிட்டு தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.

    English summary
    Legendary director/ cinematographer balumahendra death anniversary day today his fans and well wishers remembered him and posted his photo and leave there thoughts as a post.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X