twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த அரக்கர்களை கொரோனாதான் கொண்டு போகணும்.. கொல்லப்பட்ட கர்ப்பிணி யானை.. கொந்தளிக்கும் பிரபலங்கள்!

    |

    சென்னை: கேரளாவில் கர்ப்பிணி யானை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    Recommended Video

    Khushbu Slapping Question • மனிதர்களுக்கு ஆறு அறிவு இருக்கா? | Pregnant Elephant

    கேரள மாநிலத்தில் யானை ஒன்று கொல்லப்பட்டிருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    கேரள மாநிலம் பாலக்காடு வனப்பகுதியில் கர்ப்பிணி காட்டு யானை ஒன்று உணவு தேடி மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு வந்துள்ளது. அப்போது வெடி பொருட்கள் நிரம்பிய அன்னாசி பழத்தை யாரோ யானை சாப்பிடும் படி வைத்துள்ளனர்.

    அப்ப, நல்ல பாம்பு குட்டி..இப்ப யானை..பிரபல நடிகையின் வித்தியாச பாசம்..வீடியோ வெளியிட்டு அசத்தல்! அப்ப, நல்ல பாம்பு குட்டி..இப்ப யானை..பிரபல நடிகையின் வித்தியாச பாசம்..வீடியோ வெளியிட்டு அசத்தல்!

    வலியால் தவித்த யானை

    வலியால் தவித்த யானை

    அதனை ஆர்வமாக சாப்பிட்ட யானையின் வாயிலேயே அந்த அண்ணாசிப் பழம் வெடித்துள்ளது. இதனால் அதன் வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் எதையும் சாப்பிட முடியாமல் தவித்து வந்துள்ளது அந்த 15 வயது காட்டு யானை. வலி பொறுக்க முடியாமல் இருந்த அந்த யானை அங்குள்ள ஆற்றில் இறங்கி நின்றுள்ளது.

    குட்டியும் இறந்தது

    குட்டியும் இறந்தது

    பின்னர் அப்படியே தண்ணீரில் உயிரை விட்டுள்ளது அந்த கர்ப்பிணி யானை. யானையின் பிரேத பரிசோதனையில் அதன் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்து போயிருந்தது. யானை தண்ணீரில் காயத்துடன் அமைதியாக நின்ற வீடியோக்களும் போட்டோக்களும் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெரும் அதிர்ச்சி

    பெரும் அதிர்ச்சி

    மேலும் யானையின் பிரேத பரிசோதனை போட்டோக்களும் அதன் வயிற்றில் இருந்த குட்டியின் போட்டோவும் வெளியாகி கலங்க செய்துள்ளது. கர்ப்பிணி யானை கொடூரமாக கொல்லப்பட்ட இந்த சம்பவம் நாடு முழுக்கவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    மனிதாபிமானம் இல்லை

    மனிதாபிமானம் இல்லை

    இதனை முன்னிட்டு காலை முதலே #Elephant என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட் செய்யப்பட்டு வருகிறது. கர்ப்பிணி யானை குறித்த கலங்க வைக்கும் கார்ட்டூன்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதிக படிப்பாளிகளை கொண்ட கேரளாவில் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லை என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

    வரலக்ஷ்மி

    வரலக்ஷ்மி

    திரைத்துறை பிரபலங்கள் பலரும் இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில், நான் சொன்னது போல மனிதர்கள் அரக்கர்கள்.. இந்த ஏழை விலங்குகள் அல்ல.. கல்வியறிவுக்கு மனிதாபிமானம் அல்லது பரிவு ஆகியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லை அல்லது பொது அறிவு சிறிதும் இல்லை என்பதை இது நிரூபிக்கிறது!! வெறுப்பாக உள்ளது.. இந்த அரக்கர்களுக்கு கொரேனா வரவேண்டும்..அவர்கள் இறந்துவிடுவார்கள் என்று நம்புகிறேன்!! என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

    பிரணிதா

    பிரணிதா

    இதேபோல் நடிகை பிரணிதா பதிவிட்டுள்ள டிவிட்டில் மனிதாபிமானத்திற்கு என்ன ஆனது என பதிவிட்டுள்ளார். மேலும் குட்டியை வயிற்றில் சுமக்கும் யானை ஒன்று நாங்கள் உங்களை நம்பினோம் ஆனால் நீங்கள் எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டீர்கள் என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார்.

    நடிகை சிம்ரன்

    நடிகை சிம்ரன்

    நடிகை சிம்ரன் பதிவிட்டுள்ள டிவிட்டில், உண்மையிலேயே இதயம் நொறுங்கிவிட்டது.. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.. இந்த அப்பாவி உயிரினங்கள் மீதான வன்முறையை நிறுத்த வேண்டும். அவையும் இந்த உலகில் உள்ள அனைத்து அன்பிற்கும் கவனிப்பிற்கும் தகுதியானவை என தெரிவித்துள்ளார்.

    ராஷி கண்ணா

    ராஷி கண்ணா

    நடிகை ராஷி கண்ணா பதிவுட்டுள்ள டிவிட்டில் இது இதயத்தை உடைக்கும் ஒரு சம்பவம். மனித நேயம் இறந்துவிட்டது என யானை உயிரிழந்த செய்தியையும், கர்ப்பிணி யானை குறித்த கார்ட்டூனையும் ஷேர் செய்திருக்கிறார்.

    நடிகை பூஜா பட்

    நடிகை பூஜா பட்

    இதேபோல் நடிகை பூஜா பட் பதிவிட்டுள்ள டிவிட்டில், நாம் விநாயகரை வணங்குகிறோம், ஆனால் யானைகளை கொன்று துன்புறுத்துகிறோம். நாம் அனுமன் கடவுளை வணங்குகிறோம், ஆனால் குரங்குகளை சங்கிலியால் கட்டிப்போட்டு வித்தை காட்ட வைத்து மகிழ்ச்சி அடைகிறோம். நாம் பெண் தெய்வங்களை வணங்குகிறோம், ஆனால் பெண்களில் வலிமையை எதிர்க்கிறோம், அவர்களை துன்புறுத்துகிறோம். பெண் சிசுக்கொலை செய்கிறோம் என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

    அக்ஷய் குமார்

    அக்ஷய் குமார்

    பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷ்ய் குமார் அந்த யானைக்கு நடந்த சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. மனிதாபிமானமற்ற இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Cinema celebrities are slaming for the Elephant killed in Kerala. #Elephant hashtag also trending on social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X