சிம்ரன் முதல் அபர்ணா தாஸ் வரை.. கிறிஸ்துமஸ் கொண்டாடிய திரை பிரபலங்களின் க்ளிக்ஸ்!

சென்னை: இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் இதனை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. கிறிஸ்துவர்கள், கிறிஸ்து பிறப்பை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் திரை நட்சத்திரங்கள் கிறிஸ்துமசை கொண்டாடி வரும் நிலையில், பிரபலங்கள் தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் ரசிகர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் ஜாலியாக கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

cinema celebrities christmas celebration check photos here

மடோனா செபாஸ்டின்: ப்ரேமம் படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான மடோனா செபாஸ்டியன் தமிழிலில் காதலும் கடந்து போகும் படத்தில் மூலம் அறிமுகமானார். அதன் பின் கவண், பா.பாண்டி, ஜூங்கா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், அண்மையில் வெளியான லியோ படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்திருந்தார். தற்போது லண்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் மடோனா செபாஸ்டின் அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

cinema celebrities christmas celebration check photos here

சிம்ரன்: தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நடிகையாக இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அனைத்து நடிகர்களுடன் சிம்ரன் ஜோடியாக நடித்துள்ளார். இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

cinema celebrities christmas celebration check photos here

சாக்ஷி அகர்வால்: வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சாக்ஷி அகர்வால் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், கிறிஸ்துமஸ் என்பது எதிர்பார்ப்பு, மந்திரம் மற்றும் நேசத்துக்குரிய மரபுகளின் பிரகாசம் ஆகியவற்றின் இரவு. மகிழ்ச்சியின் உணர்வைத் தழுவி, உங்களுக்குப் பிடித்தவர்களுடன் அரவணைப்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என கேப்ஷனுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

cinema celebrities christmas celebration check photos here

மாளவிகா மேனன்: மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை மாளவிகா மேனன், தமிழில் இவன் வேற மாதிரி படத்தில் நாயகியின் தங்கையாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதைத்தொடர்ந்து, விழா, பிரம்மன், வெத்து வேட்டு, நிஜமா நிழலா, பேய் மாமா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், மினுமினுக்கும் சிவப்பு நிற உடையில் தனது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

cinema celebrities christmas celebration check photos here

விஜயலட்சுமி: இயக்குநர் அகத்தியனின் மகளான நடிகை விஜயலட்சுமி, சென்னை 28, அஞ்சாதே, போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வலம் வந்த வண்ணம் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், தனது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

cinema celebrities christmas celebration check photos here

நமிதா மாரிமுத்து: தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து கலந்து கொண்டார். பேஷன் ஷோ, மாடலிங் துறைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் இவர், திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

cinema celebrities christmas celebration check photos here

அபர்ணா தாஸ்: மலையாளத்தில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்த அபர்ணா தாஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின் கவின் உடன் இணைந்து டாடா என்ற படத்தில் நடித்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வேற லெவல் வரவேற்பை பெற்றது. இதில் கல்லூரி படிக்கும் பெண்ணாகவும், கர்ப்பிணியாகவும் நடித்து பெயர் எடுத்தார். இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோயர்களை வைத்து இருக்கும் இவர் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X