நாம் கொரோனா வந்து சாக தகுதியானவர்கள்தான்.. சிறுமி கொலை விவகாரத்தில் கொதிக்கும் பிரபலங்கள்!

சென்னை: புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனனர்.

Recommended Video

Tamannaah Bhatia boredom Video | Exercise, Cooking, Trend Setting • MPL Gaming App

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் 7 வயது மகள் திடீரென மாயமானார்.

இரவு நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

அப்போது அங்கிருந்த முட்புதரில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சிறுமி சடலமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.

பெரும் அதிர்வலைகள்

பெரும் அதிர்வலைகள்

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேஷ் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திரைத்துறை பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வாழ தகுதியற்றவர்கள்

வாழ தகுதியற்றவர்கள்

அந்த வகையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில், என்ன கொடுமை நடக்கிறது?? மற்றொரு குழந்தை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது.. இதுதான் நாம் வாழும் உலகம்.. நாம் அனைவரும் கோவிட் பெற்று இறப்பதற்கு தகுதியானவர்கள்.. அதுவே மனிதர்களாகிய நமக்கு கடவுளின் பதில்களாக இருக்கலாம்.. நாம் வாழ தகுதியற்றவர்கள்.. என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

தூக்கிலிட வேண்டும்

தூக்கிலிட வேண்டும்

இதேபோல் நடிகை ஐஸ்வர்யா தத்தா பதிவிட்டுள்ள டிவிட்டில், என்ன ஒரு வெட்கக்கேடான முட்டாள்தனம் 7 வயது பெண் குழந்தையை எப்படி பாலியல் பலாத்காரம் செய்ய முடியும்.. இதற்கு ஒரே ஒரு தண்டனை உன்னைத் தூக்கிலிட வேண்டும்... என் இதயம் நொறுங்கிவிட்டது. கடவுள் ஜெயபிரியாவின் குடும்பத்திற்கு அதிக பலத்தை அளிக்கட்டும்.. என பதிவிட்டுள்ளார்.

குற்றங்கள் அதிகரிக்கிறது

குற்றங்கள் அதிகரிக்கிறது

இதேபோல் நடிகை சாய் பல்லவியும் சிறுமி ஜெயப்பிரியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பபட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், பல கொடூரமான குற்றங்கள் இருக்கும் ஒரு நிலைக்கு வந்துவிட்டதால், ஒன்றை அங்கீகரிக்க ஒரு ஹேஷ்டேக்கைப் பயன்படுத்த வேண்டும் என #JusticeforJayapriya என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டுள்ளார்.

 இதயம் நொறுங்குகிறது

இதயம் நொறுங்குகிறது

இதேபோல் நடிகை ராதிகா சரத்குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில், அதைப் பற்றி படிக்கும் போதே என் இதயம் நொறுங்குகிறது. கண்களில் கண்ணீர் சிந்தாமல் அதைப் பற்றி எழுதக்கூட வலிமை இல்லை, குற்றவாளிகளை விடக்கூடாது என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X