கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு.. கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள்!

சென்னை: கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாசமாக பேசி கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் வீடியோ வெளியிட்டதற்கு திரைத்துறை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Kandha Sasti Kavasam, Murugan-ஐ ஆபாசமாக விமர்சிப்பதா? | Karuppar Koottam | Oneindia Tamil

கந்த சஷ்டி கவசம் குறித்து கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வெளியான வீடியோ இந்து அமைப்புகளை கோபப்படுத்தியிருக்கிறது.

இந்த சேனலை தடை செய்ய வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

மேலும் கந்த சஷ்டி கவசம் பற்றி சர்ச்சையாகப் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இதுதொடர்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள் கண்டனம்

பிரபலங்கள் கண்டனம்

இந்நிலையில் கந்த சஷ்டி கவசம் மற்றும் இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் பேசி வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆடி போயிடுவீங்க

ஆடி போயிடுவீங்க

ஏற்கனவே இயக்குநர் கௌரவ் நாராயணன் இந்துக்களின் நம்பிக்கையை அசைத்து பார்க்க வேண்டாம் ஆடிப்போயிவிடுவீர்கள் என எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டிருந்தார். மாதா, பிதா, குரு சரியாக அமையாதவர்களுக்கு தெய்வத்தை பற்றி தெரியாது என சாடியிருந்தார்.

என்னை காக்கும்

என்னை காக்கும்

இந்நிலையில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, என் ஜபம்.. கந்த ஷஷ்டி கவசம் என்னை காக்கும்...என் வாழ்வு அதனால்..என பதிவிட்டுள்ளார்.

சிவனாலேயே முடியாதுடா..

சிவனாலேயே முடியாதுடா..

மற்றொரு டிவிட்டில் போங்கடா முட்டாளுங்களா... முருகனை பத்தி சொல்ல.. சிவனாலேயே முடியாதுடா.. என காட்டமாக கூறியிருக்கிறார். மேலும் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் கிடையாது... சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் கிடையாது... சரவணபவாய நமஹ...என்றும் பதிவிட்டுள்ளார் நட்டி.

மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல

மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல

இதேபோல் நடிகர் பிரசன்னாவும் இந்துக் கடவுள்களை ஆபாசமாக சித்தரித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, எவரும் எவருடைய நம்பிக்கையையும் ஓரளவு கடந்து விமர்சிக்கிறேனென்று கொச்சைப்படுத்துவது பெரிதாய் பேசப்படும் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல. அவரையேன் கேட்பதில்லை இவரையேன் கேட்பதில்லை எங்கிற வாதமும் பயன்தராது.

அதிமுக்கியம்..

அதிமுக்கியம்..

அவரவர் நம்பிக்கை அவரவருக்கு பெரிது. அதை மதிக்கத் தெரியாது போக்கிரிகள் யாராயினும் எவருக்கெதிராயினும் தண்டிக்கப்பட்டால் மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும்! மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொள்ள செய்வது இன்றளவில் மத நம்பிக்கையினும் அதிமுக்கியம்.. என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X