இந்துத்துவத்தை இழிவுபடுத்துபவர்கள் அதற்கான ஆபத்தை சந்திப்பீர்கள்.. எச்சரிக்கும் பிரபலங்கள்!

சென்னை: இந்துக்கடவுள்கள் குறித்து ஆபாசமாக பேசிய கறுப்பர் கூட்டத்திற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

kandha Sasti Kavasam Issue : Karuppar Koottam-க்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள் | Oneindia Tamil

கறுப்பர் கூட்டம் என்ற யூட்யூப் சேனலில் இந்துக்கடவுள்களான முருகர், சரஸ்வதி, அனுமன் ஆகிய கடவுள்கள் குறித்து ஆபாசமாக பேசியுள்ளனர்.

மேலும் கந்த சஷ்டி கவசம் குறித்தும் இழிவு படுத்தும் வகையில் விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இந்து அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினரையும் கொதிப்படைய செய்துள்ளது.

தடை செய்ய வேண்டும்

தடை செய்ய வேண்டும்

இந்துக்களின் மனதையும் நம்பிக்கையையும் புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடும் கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதுதொடர்பாக அந்த யூட்யூப் சேனலை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குட்டி பத்மினி

குட்டி பத்மினி

இருப்பினும் சினிமா பிரபலங்கள் பலரும் கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை குட்டி பத்மினி பதிவிட்டுள்ள டிவிட்டில், #KarupparKoottam கந்த சஷ்டி கவசத்தை "கறுப்பர் கூட்டம் இழிவுபடுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கடவுள் நம்பிக்கை என்பது தனி மனிதன் சார்ந்தது. விஷயம் தெரியாமல் இந்துதுவத்தை இழிவு படுத்துபவர்கள் அதற்கான ஆபத்தை சந்திப்பீர்கள்..! (கடவுள் மூலமாகவோ அல்லது சட்டம் மூலமாகவோ) என தெரிவித்துள்ளார்.

மாளவிகா அவினாஷ்

இதேபோல் நடிகையும் பாஜக செய்தி தொடர்பாளருமான மாளவிகா அவினாஷ், கறுப்பர் கூட்டத்தை விளாசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் கறுப்பர் கூட்டம் என்றால் நாங்கள் யார்? நாங்கள் என்ன வெள்ளைக்காரர்களா? நாங்கள் வணங்கும் முருகர், கருப்பசாமி, காளி என அனைத்து கடவுள்களுமே கறுப்புதான். ராமரை உங்களுக்கு பிடிக்காது. அவரும் கறுப்புதான். அதேபோல் கிருஷ்ணாவும் கறுப்புதான். இதில் பகுத்தறிவு இல்லை அரசியல்தான் உள்ளது என விளாசி விட்டுள்ளார்.

எல்லை மீறிவிட்டனர்

இதேபோல் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கறுப்பர் கூட்டம் சேனலுக்கு பின்னால் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், அவர்கள் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டதாகவும் உலகம் முழுக்க உள்ள மக்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாகவும் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X