நடிகர் விவேக் காலமானார்.. சொல்ல முடியாத் துயர்.. பேரதிர்ச்சி.. திரை பிரபலங்கள் கண்ணீர்!
சென்னை: நடிகர் விவேக் மரணமடைந்தது பேரதிர்ச்சியாக இருப்பதாக திரைத்துறை பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Recommended Video
59 வயதான நடிகர் விவேக் நேற்று காலை திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

100% அடைப்பு
நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ குழுவினர், நடிகர் விவேக் உடல்நலக்குறைவுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தனர். விவேக் இதயத்தின் இடப்புற ரத்தக் குழாயில் 100% அடைப்பு ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

காலமானார் விவேக்
மேலும் நடிகர் விவேக் இன்னும் ஆபத்தான நிலையில்தான் இருக்கிறார் என்றும் 24 மணிநேரத்திற்கு பிறகே அவரது உடல்நிலை குறித்து சொல்ல முடியும் என்றும் கூறினர். இந்நிலையில் நடிகர் விவேக் இன்று காலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபலங்கள் இரங்கல்
அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அதிர்ச்சி
நடிகை ராதிகா சரத்குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அதிர்ச்சி.. உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட பல அற்புதமான நினைவுகள் மற்றும் தருணங்கள் எனது நினைவில் ஓடிக்கொண்டிருக்கிறது. என் இதயம் உங்களின் குடும்பத்தினருடன் செல்கிறது.. ரெஸ்ட் இன் பீஸ் மை டியர் பிரண்ட்.. என பதிவிட்டுள்ளார்.
பொக்கிஷமாக இருக்கும்
இயக்குநர் மோகன் ராஜா பதிவிட்டுள்ள டிவிட்டில், விவேக் சார் அதிர்ச்சியாக உள்ளது.. இந்த லெஜன்ட் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை.. எம் குமரன் படத்தில் அவருடன் பணியாற்றியது பொக்கிஷமாக இருக்கும்.. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
நம்ப மறுக்கின்றன
இசையமைப்பாளர் டி இமான் பதிவிட்டுள்ள டிவிட்டில், எங்கள் விவேக் சார் இல்லை என்ற உண்மையை என் இதயமும் ஆத்மாவும் நம்ப மறுக்கின்றன..
என்ன ஒரு அசாதாரண கலைஞரையும் ஒரு மனிதரையும் நாம் இழந்து விட்டோம்..
அவரது நெருங்கிய குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கல்.. என பதிவிட்டுள்ளார்.
சொல்ல முடியாத் துயர்
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு... வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்! என குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் புகழ் இருக்கும்
இயக்குநர் சேரன் பதிவிட்டுள்ள டிவிட்டில், செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. எத்தகைய மனிதர்களையும் இறைவன் சூழ்ச்சியால் காவு கொள்வான் என்றால்.. எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார்.. திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும்.. என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











