எங்களை போன்ற நடிகர்களுக்கு அவர்தான் ஹீரோ... திலீப்குமார் மரணம்.. சினிமா பிரபலங்கள் உருக்கம்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமாரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார். 98 வயதான திலீப்குமார் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த 30 ஆம் தேதி மூச்சு திணறல் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் திலீப்குமார்.
அவர்தான் ஹீரோ
பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில், இந்த உலகத்தில் இன்னும் பலர் ஹீரோக்களாக இருக்கலாம். ஆனால் எங்களை போன்ற நடிகர்களுக்கு அவர்தான் ஹீரோ. திலீப்குமார் சார் இந்திய சினிமாவின் முழு சகாப்தத்தையும் தன்னுடன் எடுத்து சென்றுவிட்டார். அவரது குடும்பத்திற்கு என்னுடைய எண்ணங்களும் பிரார்த்தனைகளும்.. ஓம் ஷாந்தி.. என பதிவிட்டுள்ளார்.
அஸ்திவாரத்தின் பெரும் பகுதி
சினிமாவுக்கு பெரும் பங்களிப்பு கொடுத்த ஒருவரை நாம் இழந்துவிட்டோம், அவருக்குப் பிறகு பல நடிகர்கள் கலைஞர்களுக்கு வழி வகுத்தோம். இந்திய சினிமாவின் அஸ்திவாரத்தின் ஒரு பெரிய பகுதி... லெஜன்ட்.. ரெஸ்ட் இன் பீஸ் திலீப்குமார் சார்.
ஒரு சகாப்தத்தின் முடிவு
இதேபோல் நடிகை ஹன்சிகா மோத்வானி பதிவிட்டுள்ள டிவிட்டில், எழும்போதே ஒரு சோக செய்தியுடன் எழுந்துள்ளோம். நாள் ஆரம்பிக்கும் போதே ஒரு ஹார்ட் பிரேக்கிங் செய்தி.. திலீப்குமார் சார் ஒரு சகாப்தத்தின் முடிவு.. அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை என பதிவிட்டுள்ளார்.
அற்புதமான ஜீனியஸ்
இதேபோல் நடிகர் சுஹேல் சேத் பதிவிட்டுள்ள டிவிட்டில் அற்புதமான ஜீனியஸ் ஓய்வெடுங்கள்.. என திலீப்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் சகாப்தத்தின் முடிவு
நடிகர் கமால் ஆர் கான் பதிவிட்டுள்ள இரங்கல் டிவிட்டில் பாலிவுட்டின் பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ட்ராஜிடி கிங் திலீப்குமார் 98 வயதில் காலமாகியுள்ளார். இது பாலிவுட் சகாப்தத்தின் முடிவு.. அவர் மிஸ் செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்.
பங்களிப்பு விலை மதிப்பற்றது
நடிகர் கமால் ஆர் கான் பதிவிட்டுள்ள இரங்கல் ட்வீட்டில் பாலிவுட்டின் பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ட்ராஜிடி கிங் திலீப்குமார் 98 வயதில் காலமாகியுள்ளார். இது பாலிவுட் சகாப்தத்தின் முடிவு.. அவர் மிஸ் செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்.
பலரும் இரங்கல்
இதேபோல் நடிகர் பிரித்திவிராஜும் நடிகர் திலீப்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் திலீப்குமாரின் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











