twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொதுவுடமை தூணொன்று சாய்ந்தது.. தா.பாண்டியன் மறைவு.. திரை பிரபலங்கள் இரங்கல்!

    |

    சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியனின் மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனறர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா. பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஜல்லிக்கட்டு திரைப்படம் பின் வாங்கிய நிலையில் ஆஸ்கர் ரேஸில் முன்னேறியுள்ளது சூரரைப் போற்று!ஜல்லிக்கட்டு திரைப்படம் பின் வாங்கிய நிலையில் ஆஸ்கர் ரேஸில் முன்னேறியுள்ளது சூரரைப் போற்று!

    89 வயதான தா பாண்டியன் சிறுநீரக தொற்று, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.

    சுவாச கருவி

    சுவாச கருவி

    அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சையளித்து வந்தனர். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. தொடர்ந்து செயற்கை சுவாச கருவி உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    காலமானார் தா பாண்டியன்

    காலமானார் தா பாண்டியன்

    இந்நிலையில் தா.பாண்டியன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சிகிச்சைப் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பணியாற்றிய தா பாண்டியன், இரண்டு முறை எம்பியாகவும் இருந்துள்ளார்.

    தூணொன்று சாய்ந்தது

    தூணொன்று சாய்ந்தது

    தா பாண்டியனின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
    பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது. பற்பல விழுதுகள் பாய்ச்சிவிட்டு கம்யூனிஸ வேரொன்று வீழ்ந்திருக்கிறது. தோழர் தா.பாண்டியன் மறைவு தமிழர்கள் அனைவருக்குமே பொது இழப்பு என குறிப்பிட்டுள்ளார்.

    பாசமுள்ள பாண்டியரே..

    பாசமுள்ள பாண்டியரே..

    இதேபோல் கவிஞர் வைரமுத்துவும் தா பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள இரங்கல் டிவிட்டில், 21 வயதிலிருந்தே கட்சிக்காரர்
    கோணாத கொள்கையாளர்
    ஈட்டிமுனைப் பேச்சாளர்
    பெரியாரின் பெருமை பேசிய கம்யூனிஸ்ட்
    ஜனசக்தியின் அடங்காத ஆசிரியர்
    ஜீவாவுக்குச் சிலையெழுப்பிய சிற்பி
    சிறிதும் சாயம் போகாத
    சிவப்புத் துண்டுக்காரர்.
    போய் விட்டீரே!
    உமக்கு எங்கள் புகழ் வணக்கமய்யா
    பாசமுள்ள பாண்டியரே.. என குறிப்பிட்டுள்ளார்.

    மண்ணின் மைந்தன்

    மண்ணின் மைந்தன்

    இதேபோல் இயக்குநர் பாரதிராஜாவும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் பொதுவுடமைவாதி, இலக்கியவாதி, நாணயமிக்க அரசியல்வாதி, தமிழுக்காகவும்
    தமிழ் ஈழத்திற்காகவும்
    தமிழர் நலனுக்காகவும்
    நீண்ட நெடிய
    போராட்டங்களை
    முன்னெடுத்த
    என் மண்ணின் மைந்தன்
    போராளி தா.பாண்டியன் அவர்களின் மறைவு
    தோழர்களுக்கும்
    தமிழ் மக்களுக்கும்
    பேரிழப்பாகும்.. என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Senior leader of the communist party D Pandian passes away. Cinema celebrities condoles for D Pandian demise.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X