தேசம் ஒரு தலைவரை இழந்துவிட்டது.. அருண் ஜெட்லி மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்!

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சரான அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று பகல் அவர் காலமானார்.

அருண் ஜெட்லியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையை சேர்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் துக்கத்தை பகிர்ந்து வருகின்றனர்.

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் திடீர் மறைவு செய்தியை கேட்டு பெரும் துயரமடைந்தேன். சட்டத்துறை வல்லுநர், செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லியை இந்த தேசம் எப்போது நினைவில் வைத்திருக்கும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்திருக்கிறார்.

நடிகர் ஹ்ருத்திக் ரோஷன்

நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் பதிவிட்டுள்ள டிவிட்டில் அருண் ஜெட்லி ஜியின் திடீர் மறைவு பற்றி கேட்டதும் மனம் உடைந்து போனது. தேசம் இன்று ஒரு தலைவரை இழந்துள்ளது. இந்த நேரத்தில் துக்கத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரின் நெருக்கமானவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் அனில் கபூர்

நடிகர் அனில் கபூர் பதிவிட்டுள்ள டிவிட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அருண் ஜெட்லியை சந்தித்தேன். அன்று முதல் அவர் அபிமானியாக இருக்கிறேன். அவருடைய மறைவு நாட்டிற்கு பேரிழப்பு. உண்மையிலேயே தவறவிட்டுவிட்டோம். அவரது
குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

நடிகர் அர்ஜூன் கபூர்

நடிகர் அர்ஜூன் கபூர் பதிவிட்டுள்ள டிவிட்டில் அருண் ஜெட்லியின் இழப்பு குறித்து அறிந்து மிகவும் துயரமடைந்தேன். அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் அன்பானவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

நடிகர் சன்னி தியோல்

நடிகரும் எம்பியுமான சன்னி தியோல் பதிவிட்டுள்ள டிவிட்டில் தேசம் மற்றொரு தலைவரை இழந்துவிட்டது. அவரின் குடும்பதினருக்கு என இரங்கல்களும் நினைவுகளும் என பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் சஞ்சய் தத்

நடிகர் சஞ்சய் தத் பதிவிட்டிருக்கும் டிவிட்டில் அருண் ஜெட்லி சாரின் மறைவைக் கேட்டு ஆழ்ந்த சோகமும் அதிர்ச்சியும். முக்கிய தலைவர்களில் ஒருவரை இன்று இழந்துவிட்டோம். எனது பிரார்த்தனைகள் அவருடைய குடும்பத்தினருடனும் அன்பானவர்களுடனும் உள்ளன என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X