அம்மாவின் இடத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது.. நடிகர் பிரேம்ஜியின் அம்மா மறைவு.. பிரபலங்கள் இரங்கல்!
சென்னை: இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியும் நடிகர் பிரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபுவின் அம்மாவுமான கமலாம்மாள் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.
இவரது மூத்த மகன் வெங்கட் பிரபு இயக்குனராக வலம்வருகிறார். இளையமகன் பிரேம்ஜி நடிகராக உள்ளார்.

கங்கை அமரினின் மனைவி
இந்நிலையில் கங்கை அமரனின் மனைவியும் பிரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபுவின் தாயாருமான மணிமேகலை காலமாகியுள்ளார். 69 வயதான மணிமேகலை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

பிரபலங்கள் இரங்கல்
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு மணிமேகலை காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

டிடி இரங்கல்
அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியான டிடி பதிவிட்டுள்ள டிவிட்டில் ஆழ்ந்த இரங்கல் வெங்கட் பிரபு அண்ணா மற்றும் பிரேம்ஜி என பதிவிட்டுள்ளார்.

நடிகர் பிரசன்னா
இதேபோல் நடிகர் பிரசன்னா பதிவிட்டுள்ள டிவிட்டில், ஆழ்ந்த இரங்கல் டியர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி.. தைரியமாக இருங்கள் சகோதரர்களே என பதிவிட்டுள்ளார்.

நடிகர் கதிர்
இதேபோல் நடிகர் கதிரும் இரங்கல் தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி தைரியமாக இருக்க வேண்டும் என்றும், அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

நடிகை கஸ்தூரி
இதேபோல் நடிகை கஸ்தூரியும் கங்கை அமரன் மனைவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தனது டிவிட்டில் வருத்தம் தெரிவித்துள்ள கஸ்தூரி, கடவுள் உங்களுக்கு துணிச்சலையும் தைரியத்தையும் வழங்கட்டும்.. கலாம்மாவின் நினைவுகள் உங்களை வழிநடத்தும் என்றம் பதிவிட்டுள்ளார்.

ராதிகா இரங்கல்
இதேபால் நடிகை ராதிகா சரத்குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில் தங்களின் தாயை இழந்து தவிக்கும் பிரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபுவுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் அம்மா வெரி ஸ்பெஷல் என்பதும் அன்பான ஆத்மா என்பது எனக்கு தெரியும், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

வனிதா விஜயக்குமார்
நடிகை வனிதா விஜயக்குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில் வார்த்தைகள் இல்லை... அம்மா யாராலும் ரீப்ளேஸ் செய்ய முடியாதவர்... இந்த கடுமையனா காலத்தில் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜிக்கு தைரியத்தை கொடுக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். அன்புக்குரியவர்களை இழக்கும்போது ஏற்றுக்கொள்வது மட்டும்தான் ஒரே ஆறுதல் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











