பேரதிர்ச்சி.. நம்பவே முடியல.. சினிமாவுக்கு பேரிழப்பு.. கேவி ஆனந்த் மரணம்.. பிரபலங்கள் உருக்கம்!

சென்னை: இயக்குநர் கேவி ஆனந்தின் மரணம் தமிழ் சினிமாவை உலுக்கியுள்ள நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

KV Anand மறைவு! பிரபலங்கள் கண்ணீர் | Vivekh இழப்பே மறக்கவில்லை #RIPAnand

தமிழ் சினிமாவில் கேமரா மேனாக வாழ்க்கையை தொடங்கிய கேவி ஆனந்த் வெற்றி இயக்குநராக வலம் வந்தார்.

இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கேவி ஆனந்த். இந்நிலையில் இன்று காலை கேவி ஆனந்த் திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

பேரதிர்ச்சி

பேரதிர்ச்சி

இயக்குநர் கேவி ஆனந்தின் திடீர் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் #RIPKVAnand, Rest In Peace, #RIP Sir ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பெரும் அதிர்ச்சி

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் கேவி ஆனந்தின் மறைவு குறித்த உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் பெரும் அதிர்ச்சியாக உள்ளது நம்பவே முடியவில்லை.. ரெஸ்ட் இன் பீஸ் சார் என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பெரிய இழப்பு

இதேபோல் பிரபல தொகுப்பாளினியான டிடி பதிவிட்டுள்ள டிவிட்டில் அதிர்ச்சியளிக்கிறது.. கேவி ஆனந்த் சார்.. மற்றொரு பெரிய இழப்பு... ரொம்ப சீக்கிரம் போய்ட்டிங்களே.. சாதுவான நபர்.. அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.. ரிப் சார் என பதிவிட்டுள்ளார்.

நம்பவே முடியவில்லை

இதேபோல் நடிகை குஷ்புவும் கேவி ஆனந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் நம்பவே முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், #RIP #KVAnand என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

ரெஸ்ட் இன் பீஸ்

இதேபோல் பிக்பாஸ் பிரபலமும் நடிகருமான கவினும் இயக்குநர் கேவி ஆனந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ரெஸ்ட் இன் பீஸ் கேவி ஆனந்த் சார் என குறிப்பிட்டுள்ளார்.

நவரத்தினத்தை இழந்துள்ளது

நகைச்சுவை நடிகர் யோகி பாபு பதிவிட்டுள்ள டிவிட்டில், கேவி ஆனந்த் சாரின் மறைவு செய்தியை கேட்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளேன். தமிழ் சினிமா மற்றொரு நவரத்தினத்தை இழந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

இன்னும் நம்ப முடியவில்லை

இதேபோல் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான நடிகை சாக்ஷி அகர்வால் பதிவிட்டுள்ள டிவிட்டில், இந்த செய்தியை கேட்க அதிர்ச்சியாக உள்ளது. நீங்கள் இல்லை என்பதை இன்னமும் நம்ப முடியவில்லை.. ரெஸ்ட் இன் பீஸ் கேவி ஆனந்த் சார் என பதிவிட்டுள்ளார்.

மோசமான ஆண்டு

நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ள டிவிட்டில் சில நாட்கள் எழுந்திருக்கவே வேண்டாம் என்று எண்ணுகிறேன்.. தமிழ் சினிமாவுக்கு இதுவரை இருந்ததில் இது மோசமான ஆண்டு.. #KVAnand #GoneTooSoon என குறிப்பிட்டுள்ளார்.

இதயமே நொறுங்கிவிட்டது

பிக்பாஸ் தர்ஷன் பதிவிட்டுள்ள டிவிட்டில் கேவி ஆனந்த் சாரின் மறைவு செய்தி இதயத்தையே நொறுக்கிவிட்டது.. கோ, அயன், காப்பான் போன்ற அருமையான படங்களை கொடுத்ததற்கு நன்றி சார்.. அவருடைய குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்.. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X