வசந்தகுமாரின் மறைவு பேரதிர்ச்சி.. பெரும் துயரம்.. குஷ்பு முதல் வெங்கட் பிரபு வரை பிரபலங்கள் இரங்கல்!

சென்னை: காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரின் மறைவு பேரதிர்ச்சியாக உள்ளது என திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

கொரோனாவால் பாதிக்கப்பட்ட Congress MP Vasantha Kumar மரணம்

காங்கிரஸ் எம்பியும் வசந்த் அன்ட் கோ நிறுவனருமாக இருந்தவர் எச் வசந்தகுமார். இவரது மகன் விஜய் வசந்த் ஒரு நடிகர் ஆவார்.

நடிகர் விஜய் வசந்த், சென்னை 28, நண்பன், நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது அப்பாவான எம்பி வசந்தகுமார் கடந்த 11ஆம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிர் பிரிந்தது

உயிர் பிரிந்தது

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இன்று காலை முதலே செய்திகள் வெளியானது. இந்நிலையில் இன்று மாலை சிகிச்சைப் பலனின்றி எம்பி வசந்தகுமாரின் உயிர் பிரிந்தது.

இரங்கல்

இரங்கல்

அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான, குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குஷ்பு இரங்கல்

குஷ்பு இரங்கல்

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கன்னியாகுமரி தொகுதி எம்பியான வசந்தகுமார் மறைந்துவிட்டதாக கொடூரமான செய்தி வந்துள்ளது. மிகவும் சோகமான ஒன்று. நாங்கள் ஒரு தீவிரமான காங்கிரஸ்காரர் மற்றும் கடின உழைப்பாளரை இழந்துவிட்டோம். அவர் கொரோனாவுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும் வரை, அவரை நேசித்த மற்றும் மதிக்கும் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்தார். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார்.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

இதேபோல் பாஜக பிரமுகரும் நடன இயக்குநர் மற்றும் நடிகையுமான காயத்ரி ரகுராமும் டிவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், வசந்தகுமார் இறந்துவிட்டார் என்ற தகவலை கேட்கவே அதிர்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் விஜய் வசந்தின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்.. ஓம் ஷாந்தி என தெரிவித்துள்ளார்.

உச்சத்தை தொட்டவர்

உச்சத்தை தொட்டவர்

இதேபோல் இயக்குநர் மோகன் ஜியும் வசந்தகுமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், உழைப்பால் உயர்ந்தவர்.. சிரிப்பால் வியாபாரத்தில் உச்சத்தை தொட்டவர்.. ஆத்மா சாந்தி அடையட்டும் அண்ணாச்சி.. என தெரிவித்துள்ளார்.

நடிகர் சரத்குமார்

நடிகர் சரத்குமார்

இதேபோல் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமனா சரத்குமாரும் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், ஒரு பெரிய மனிதநேயமிக்க மனிதர், இரக்க குணம் கொண்டவர் சுற்றிலும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்த ஒரு நபர் வசந்தகுமார், அவரது அகால மரணத்தால் பெரும் துயரமடைந்துள்ளேன். இது தாங்க முடியாத இழப்பு, குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சக காங்கிரஸ்காரர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கல், நிம்மதியாக ஓய்வெடுங்கள் வசந்தகுமார் என பதிவிட்டுள்ளார்.

வெங்கட்பிரபு

வெங்கட்பிரபு

இதேபோல் இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்ட டிவிட்ல் வசந்த குமார் மறைந்துவிட்டார் என்ற தவறானதாக இருக்க வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் சகோதரர்களே.. தைரியமாக இருங்கள் விஜய் வசந்துக்கும் அவரது சகோதரருக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X