வளமான சங்கநாத குரல் கொண்ட மூத்தப்பாடகர்... மாணிக்க விநாயகம் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்!
சென்னை: பாடகர் மாணிக்க விநாயகத்தின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
மயிலாடுதுறையை அடுத்த வழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் பாடகர் மாணிக்க விநாயகம். இவர் பழம் பெரும் பரதநாட்டிய கலைஞர் வழு வூர் ராமைய்யா பிள்ளையின் மகன் ஆவார்.
தனது மாமாவான சிஎஸ் ஜெயராமனிடம் இசை பயின்ற மாணிக்க விநாயகம், விக்ரம் நடித்த தில் படத்தில் கண்ணுக்குள்ள கெளுத்தி பாடலை பாடி சினிமாவுக்கு அறிமுகமானார்.

ஏராளமான பாடல்கள்
தொடர்ந்து தவசி படத்தில் ஏலேய் இமயமலை, கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் விடை கொடு எங்கள் நாடே.. ரன் படத்தில் இடம் தேரடி வீதியில் தேவதை வந்தால், சுப்பம்மா சுப்பம்மா, கொடுவா மீசை, சின்ன வீடா வரட்டுமா, கொக்கு பறபற... கட்டு கட்டு கீரக்கட்டு.. சிங்கம் படத்தின் நானே இந்திரன் உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.

முன்னணி நடிகர்களுடன்
பாடகராக மட்டுமின்றி சிறந்த நடிகராகவும் வலம் வந்தார் மாணிக்க விநாயகம். திருடா திருடி, கம்பீரம், பேரழகன், கிரி, அறிவுமணி, போஸ், கள்வனின் காதலி, திமிரு, புலி வருது, சந்தோஷ் சுப்பிரமணியம், தோழி, வேட்டைக்காரன், பலே பாண்டியா, வா குவாட்டர் கட்டிங், யுத்தம் செய், அவர்களும் இவர்களும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

முதல்வர் நேரில் அஞ்சலி
இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணிக்க விநாயகம் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 78. மாணிக்க விநாயகத்தின் உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது . அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பாடகி சித்ரா இரங்கல்
இதேபோல் சினிமா பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாடகி சித்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் மாணிக்க விநாயகம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், பிரபல பாடகர், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் மாணிக்க விநாயகம் சார் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

வளமான சங்கநாத குரல்
இதேபோல் இயக்குநர் சீனு ராமசாமி பதிவிட்டுள்ள டிவிட்டில், இசை சித்தர் சி.எஸ் ஜெயராமனின் சிஷ்யர்.
வளமான சங்கநாத குரல் கொண்ட மூத்தப்பாடகர்
நடிகர் திரு.மாணிக்க விநாயகம் அவர்கள் பண்புமிக்க பெரியவர்."விடைகொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே" என பாடி மனம் நிறைந்தார்.
என் இதய அஞ்சலி என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











