twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கருத்துள்ள கதை.. கத்திபோல் உரையாடல்.. வீ மிஸ் யூ விசு சார்.. கண்ணீர்விடும் திரை பிரபலங்கள்! #visu

    |

    சென்னை: நடிகர் விசு மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    Recommended Video

    Actor Visu Passed Away | நடிகர் விசு உடல் நலக் குறைவால் காலமானார்

    சிறு நீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் விசு இன்று மாலை உடல் நலக்குறைவால் காலமானார். விசு, இயக்குநர் சிகரம் பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து இயக்குநரானவர்.

    இயக்குநர் மட்டுமின்றி, நடிகர், எழுத்தாளர், வசனகர்த்தா, நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல்வேறு முகங்களை கொண்டவர். ரஜினிகாந்தின் தில்லு முல்லு படத்தில் நடிகராக அறிமுகனார்.

    பிரபலங்கள் இரங்கல்

    பிரபலங்கள் இரங்கல்

    கண்மணி பூங்கா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் விசு. 75 வயதான நடிகர் விசு முதுமையால், சிறுநீரகப் பிரச்னை காரணமாக கிசிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    கத்திபோல் உரையாடல்

    விசுவின் மறைவுக்கு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து கவிதை வடிவில் கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது,
    விசுவின் மறைவு வேதனை.
    கருத்துள்ள கதை, கத்திபோல் உரையாடல்,
    நம்பகத் தன்மைமிக்க நாடகம்,
    நாகரிகத் திரைக்கதை எல்லாம்
    கைவரப் பெற்ற கலைஞன்.
    சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி
    பாடல் எழுதிய பழைமை மறக்காது.
    விசு நீண்டகாலம் நினைக்கப்படுவார்.. இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

    வீ மிஸ் யூ சார்

    இதேபோல் நடிகை சுகன்யா, வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், வி மிஸ் யூ விசு சார்.. திரைப்படங்கள், ஸ்கிரிப்டுகள், பேச்சு நிகழ்ச்சிகள் மூலம் நீங்கள் கொடுத்த பங்களிப்புகள் இந்த சமூகத்திற்கு மிகவும் மதிப்புமிக்கவை என கூறியுள்ளார்.

    நீங்கள் லெஜன்ட்

    இயக்குநர் மோகன் ராஜா பதிவிட்டுள்ள டிவிட்டில், விசு சார் நீங்கள் ஒரு லெஜன்ட்.. நீங்கள் என் எண்ணங்களில் எப்போதும் இருப்பீர்கள்.. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் சார் என தெரிவித்துள்ளார். திரௌபதி இயக்குநர் மோகன் ஜி பதிவிட்டுள்ள டிவிட்டில் உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விசு சார்.. சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர் என பதிவிட்டுள்ளார்.

    ரீப்ளேஸ் செய்ய முடியாது

    இதேபோல் பாடலாசிரியர் விவேக் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஒரு சிறந்த எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகர் இனி இல்லை. யாரும் ரீப்ளேஸ் செய்ய முடியாத லெஜன்ட் என கூறியிருக்கிறார்.

    சென்று விட்டார்..

    இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள டிவிட்டில்
    இந்த லெஜன்ட் நம்மை விட்டு சென்றுவிட்டார்!
    ஒரு அற்புதமான எழுத்தாளர், அருமையான இயக்குனர், தனித்துவமான நடிகர், சிறந்த வசனகர்த்தா.. தனது உணர்வுபூர்வமான மற்றும் நகைச்சுவையான உரையாடல்களால் குடும்பங்களை கவர்ந்தார்! அவரது படங்கள் இன்றும் அர்த்தமுள்ளதாக இருக்கின்றன! # விசு சாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த இரங்கல்! என பதிவிட்டுள்ளார்.

    Read more about: visu விசு
    English summary
    Cinema celebrities condoles for the demise of Actor and director Visu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X