Padma Bhushan: தலைவணங்கிய அஜித்.. குடியரசுத்தலைவர் கொடுத்த ரியாக்ஷன்.. ஷாலினி ஆனந்த கண்ணீர்

சென்னை: இந்தியாவில் ஆண்டு தோறும் சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்படுவது உண்டு. அந்த வகையில் இந்த முறை 139 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதில், நடிகர் அஜித், நடிகை ஷோபனா ஆகியோரின் பெயரும் இடம்பெற்றது. சினிமாவை போன்று பல்வேறு துறையில் இருப்பவர்களும் குடியரசுத்தலைவர் கையால் விருதுகளை பெறுவார்கள். இதுகுறித்த ஒரு பார்வை.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் கார் பந்தயங்களில் உலக அளவில் சாதனை படைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸ் நிகழ்ச்சியில் அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை கைப்பற்றியது. இதனை கெளரவிக்கும் விதமாக அஜித்திற்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக நடிகர் சிவாஜி கணேசன் 1984ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதை பெற்றார்.அவரை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் பத்மபூஷன் விருதை பெற்றார்.

cinema celebrities congratulate Ajith on receiving the Padma Bhushan award from the President

இவர்களை தொடர்ந்து நடிகர் விஜயகாந்த் இறந்த பிறகு அவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவித்தது. இந்நிலையில், தமிழ் சினிமாவில் பத்மபூஷன் விருது பெரும் 5வது நபர் அஜித் இருக்கிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த நடிகராக திகழ்கிறார். இவருக்கு அவரது ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் டெல்லி புறப்பட்டு சென்றார்.

பத்மபூஷன்: தமிழ்நாடே எதிர்பார்த்து காத்திருந்த அந்த தருணம் தற்போது நிறைவேறியிருக்கிறது. நடிகர் அஜித் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு கையால் பத்மபூஷன் விருதை பெற்றார். இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அஜித் குமாரின் பெயரை அறிவித்ததும் எழுந்து நின்ற அஜித் சபையில் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் படி தலைவணங்கி வணக்கம் சொன்னார்.

பிரதமரை கண்டுக்காத அஜித்: அங்கு நாட்டின் பிரதமர் மோடி அமர்ந்திருந்தார், ஆனால், அஜித் அவர்களை கண்டக்காதது போல் தெரிகிறது. பத்மபூஷன் விருதை பெறுவதற்கு முன்பு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை பார்த்து தலைவணங்கி வணக்கம் செய்தார். அவரது மரியாதையை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் அஜித்திடம் பத்மபூஷன் விருதை வழங்கினார். அப்போது அனைவரும் கை கோஷம் எழுப்பி வாழ்த்து தெரிவித்தார்கள். இருப்பினும் நாட்டின் பிரதமரை கண்டுக்காமல் சென்றது சர்ச்சையாகியுள்ளது.

cinema-celebrities-congratulate-ajith-on-receiving-the-padma-bhushan-award-from-the-president

பூரிப்பில் ஷாலினி: அஜித் விருது வாங்குவதை ஷாலினி மற்றும் மகள், மகன் ஆகியோர் பூரிப்புடன் கைதட்டி இருக்கின்றனர். இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து அஜித்தின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வாழ்தது தெரிவித்துள்ளனர். மேலும், திரை பிரபலங்கள் பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து இந்திய நாடே பெருமை அடைந்திருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் அஜித் ரசிகர்கள் என்று சொல்வதற்கு பெருமை அடைவதாகவும், இதை விட வேறு என்ன வேண்டும் ஒரு ரசிகனுக்கு எனவும் தெரிவித்துள்ளனர். அஜித்தின் திறமைக்கு கிடைத்த பரிசு என்றும் ஆனந்த கண்ணீரோடு தெரிவிக்கின்றனர். தற்போது அஜித் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X