சிறப்பாக நடந்து முடிந்த புகழ் -ரியா ரிசப்ஷன்.. யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்கன்னு பாருங்க!
சென்னை : நடிகர் புகழ் மற்றும் ரியா திருமணம் இரு தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் இவர்களின் திருமண ரிசப்ஷன் நிகழ்ச்சி நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திரைத்துறை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர் புகழ்
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் புகழ். இந்த நிகழ்ச்சி இவருக்கு ஏராளமான ரசிகர்களையும் பிரபலத்தையும் கொடுத்தது. தொடர்ந்து புகழ் குக் வித் கோமாளி சீசன் 2 மற்றும் சீசன் 3 ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பான பங்களிப்பை கொடுத்தார்.

குக் வித் கோமாளி புகழ்
குறிப்பாக குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. ஷிவாங்கி உள்ளிட்டவர்களுடன் இவர் அடித்த லூட்டி அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல ரீச்சை கொடுத்தது. புகழ் இல்லையென்றால் இந்த நிகழ்ச்சி களைக்கட்டாது என்று ரசிகர்கள் நினைக்கும் அளவிற்கு புகழடைந்தார் புகழ்

ஏராளமான படங்களில் புகழ்
இந்த நிகழ்ச்சி கொடுத்த வெளிச்சத்தை அடுத்து ஏராளமான படங்களில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார். இதையடுத்து குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூட இவருக்கு நேரம் இல்லாத நிலை காணப்பட்டது. அவ்வப்போது நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

புகழ் -ரியா திருமணம்
இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலி ரியாவை கடந்த 1ம் தேதி புகழ் திருமணம் செய்துக் கொண்டார். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெற்ற இந்த திருமணத்தில் சின்னத்திரை மற்றும் பெரியத்திரை பிரபலங்கள் பங்கேற்று தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி
தொடர்ந்து புகழின் வழிகாட்டியாக இருந்த மறைந்த வடிவேலு பாலாஜிக்கு தம்பதிகள் தங்களது வணக்கத்தை செலுத்தினர். இந்நிலையில் நேற்றைய தினம் புகழ் மற்றும் ரியாவின் திருமண ரிசப்ஷன் நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கும் பிரபலங்கள் பலரும் நேரில் வந்திருந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பிரபலங்கள் வாழ்த்து
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழின் தங்கையாக மாறி அட்ராசிட்டி செய்த ஷிவாங்கி கூல் சுரேஷ் உள்ளிட்ட சின்னத்திரை மற்றும் பெரியத்திரை நட்சத்திரங்கள் தங்களது குடும்பத்தினரோடு இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.


Click it and Unblock the Notifications











