எந்த சோகத்திற்கும் உங்கள் குரல் தான்.. இந்த சோகத்திற்கும் உங்கள் குரலே ஆறுதல்.. உடைந்த பிரபலங்கள்!

சென்னை: எஸ்பிபியின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் உட்பட பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று காலமானார். 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உயிர்பிரிந்தது.

செப்டம்பர் நான்காம் தேதியே அவருக்கு கொரோனா நெகட்டிவ் ஆன நிலையில் இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ஏழு தலைமுறைக்கும்

ஏழு தலைமுறைக்கும்

பாடகர் எஸ்பிபியின் மரணம் ஒட்டு மொத்த இசை பிரியர்களையும் உலுக்கியுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ள டிவிட்டில், அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என டிவிட்டியுள்ளார்.

உடன் பிறவா அண்ணன்

மேலும் எஸ்பிபியுடன் தான் சேர்ந்திருந்த தருணங்களையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார் கமல். வீடியோவுக்கு பின்னணியில் தன்னுடைய உடன் பிறவா அண்ணன் எஸ்பிபி என உருக்கமாக பேசியிருக்கிறார் கமல்.

ஏஆர் ரஹ்மான்

இதேபோல் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் எஸ்பிபியுடன் அமர்ந்துள்ள போட்டோவை ஷேர் செய்து பெரும் அதிர்ச்சியில் உறைந்திருப்பதாகவும் அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றும் டிவிட்டியுள்ளர்.

மகேஷ் பாபு

தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவும் தனது டிவிட்டர் பக்கத்தில் எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டில் எஸ்பி பாலசுப்ரமணியம்காரு இனி இல்லை என்ற உண்மையை நம்ப முடியவில்லை. அவரது அந்த ஆத்மார்த்தமான குரலுக்கு எதுவும் ஈடில்லை. இளைப்பாருங்கள் சார். உங்கள் மரபு வாழும். குடும்பத்திற்கு மனமார்ந்த இரங்கலும் பலமும் என தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷும் தனது டிவிட்டர் பக்கத்தில் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டில், ஒரு சகாப்தம் முடிந்தது! ஈடுசெய்ய முடியாத குரல். என்றென்றும் பாடப்படும் ஒரு மரபு என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நடிகர் சதீஷ்

நகைச்சுவை நடிகர் சதீஷும் எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், எந்த சோகத்திற்கும் உங்கள் குரல் தான் ஆறுதல்....
இந்த சோகத்திற்கும் உங்கள் குரலே ஆறுதல்... மிஸ் யூ எஸ்பிபி சார் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சேரன்

இயக்குநர் சேரனும் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பதிவிட்டுள்ள டிவிட்டில் நீ வாழ்வாய் இவ்வையகம் உள்ளவரை.. உன் உடலுக்குள் இருந்த ஆன்மா இனி குரலாய் இசையாய் எங்களுக்குள் உலாவிக்கொண்டே இருக்கும்.. நீ நிரந்தரமானவன் அழியவில்லை.. எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை... என பதிவிட்டுள்ளார்.

த்ரிஷா

பிரபல நடிகையான த்ரிஷாவும் எஸ்பிபியின் மறைவு குறித்து டிவிட்டியுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, இது ஒரு தனிப்பட்ட இழப்பு போல் உணர்கிறது. நீங்கள் பாடிய படங்களில் ஒரு பகுதியாக இருந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்,
உங்களின் இசைக்கு நன்றி.. லெஜன்ட்ஸ் எப்போதும் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சேரன்

இயக்குநர் சேரனும் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பதிவிட்டுள்ள டிவிட்டில் நீ வாழ்வாய் இவ்வையகம் உள்ளவரை.. உன் உடலுக்குள் இருந்த ஆன்மா இனி குரலாய் இசையாய் எங்களுக்குள் உலாவிக்கொண்டே இருக்கும்.. நீ நிரந்தரமானவன் அழியவில்லை.. எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை... என பதிவிட்டுள்ளார்.

நடிகை த்ரிஷா


பிரபல நடிகையான த்ரிஷாவும் எஸ்பிபியின் மறைவு குறித்து டிவிட்டியுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, இது ஒரு தனிப்பட்ட இழப்பு போல் உணர்கிறது. நீங்கள் பாடிய படங்களில் ஒரு பகுதியாக இருந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன், உங்களின் இசைக்கு நன்றி.. லெஜன்ட்ஸ் எப்போதும் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X