ஓ மை காட்.. இவ்ளோ நாளா மறைச்சுட்டீங்களே.. வயலின் வாசித்த நடிகையை புகழ்ந்து தள்ளிய வாரிசு நடிகர்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் வயலின் வாசித்த வீடியோவை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி தள்ளியுள்ளனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வயலின் வாசித்து வாழ்த்து கூறியிருந்தார். மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற குட்டி ஸ்டோரி பாடலை அவர் வயலினில் வாசித்திருந்தார்.

குட்டி ஸ்டோரி பாடலை நடிகர் விஜய் தனது சொந்த குரலில் பாடியுள்ளார். ஆங்கிலம் தமிழ் என கலந்துக்கட்டி உள்ளது அந்த பாடல்.

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

அந்த பாடலை வயலினில் வாசித்த கீர்த்தி சுரேஷ் அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதனை பார்த்த விஜய் ரசிகர்கள் ரீடிவிட் செய்ததோடு லைக்ஸ்களையும் அள்ளிக் கொடுத்தனர்.

ரீடிவிட்

ரீடிவிட்

24 மணி நேரத்திற்குள் அவரது அந்த பதிவு பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளியது. 40 ஆயிரம் பேர் வரை ரீடிவிட் செய்துள்ளனர். பிரபலங்கள் பலரும் கீர்த்தி சுரேஷின் அந்த போஸ்ட்டை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

உருளும் விழிகள்

உருளும் விழிகள்

நேற்றே வீணை வாசிப்பது போன்ற போட்டோவை ஷேர் செய்த நகைச்சுவை நடிகர் சதீஷ், எங்களுக்கும் எல்லாம் தெரியும் என கிண்டலடித்திருந்தார். அவரது பதிலுக்கு க்யூட்டாக உருளும் விழிகளை வைத்து ரியாக்ட் செய்திருந்தார்.

மறைச்சுட்டீங்களே

மறைச்சுட்டீங்களே

இந்நிலையில் நடிகர் ஷாந்தனு பாக்கியராஜும் கீர்த்தி சுரேஷின் வயலின் வாசிப்பு குறித்து பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஓ மை காட், கீர்த்தி இவ்ளோ நாட்களாய் இந்த உலகத்திடம் இருந்து இதை மறைத்து வீட்டீர்களே மைண்ட் ப்ளோயிங் என புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

Recommended Video

Penguin தொடர்ந்து அடுத்த OTT Release Danny | Varalakshmi Sarathkumar
சளைக்காமல் ரிப்ளை

சளைக்காமல் ரிப்ளை

இதேபோல் மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி, மாஸ்டர் மகேந்திரன், அஜூ வர்கீஸ், அட்லி, பாடலாசிரியர் விவேக் என பலரும் கீர்த்தி சுரேஷின் திறமையை கண்டு வியந்து பாராட்டியுள்ளனர். தன்னை பாராட்டிய அனைவருக்கும் சளைக்காமல் ரிப்ளை செய்து நன்றி கூறியிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X