நீ தவழும் தருணங்களுக்காக பயத்துடனும் பிரார்த்தனையுமாக காத்திருக்கிறோம்! உருகும் பிரபலங்கள்!
Recommended Video
சென்னை: குழந்தை சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக தொடரும் நிலையில் பிரபலங்கள் பலரும் உருக்கமுடன் பிரார்த்தித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் தோட்டத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தவறி விழுந்தான். அப்போது முதல் குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நவீன எந்திரங்கள் மூலம் பக்கத்தில் குழி தோண்டி சிறுவனை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் குறுக்கே பாறைகள் இருப்பதால் எந்திரங்களே திணறி வருகின்றன. இந்நிலையில் எந்த சூழ்நிலையிலும் குழந்தையை மீட்கும் பணி கைவிடப்படாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதபேதம் இன்றி
குழந்தையை எப்படியாவது மீட்டு வெளியே கொண்டு வந்து விட மாட்டார்களா என ஒட்டு மொத்த தமிழகமும் இரவு பகலாய் பிரார்த்தனை செய்து கொண்டிருகின்றது. மதபேதம் இன்றி அனைத்து தரப்பு மக்களும் சுஜித்துக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

பிரபலங்கள் பிரார்த்தனை
டிவிட்டரிலும் #prayforsurjeeth என்ற ஹேஷ்டேக்
மூன்றாவது நாளாக இன்றும் ட்ரென்ட்டாகி வருகிறது. சினிமா பிரபலங்கள் பலரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணியை பார்த்து வருகின்றனர். அதேநேரத்தில் டிவிட்டரிலும் திரைத்துறையினர் தங்களின் பிரார்த்தனையை பகிர்ந்து வருகின்றனர்.
சிறுவனை மீட்கும்
இயக்குநர் சேரன் பதிவிட்டுள்ள டிவிட்டில் சிறுவனை மீட்கும் முயற்சியில் 51 மணி நேரமாக தொடர்ந்து செயல்படும் அமைச்சர், அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து முயற்சியாளர்களையும் பாராட்டுவோம். இவர்களின் நம்பிக்கையும் அனைத்து மக்களின் ப்ரார்த்தனையும் சிறுவனை மீட்கும்.. என தெரிவித்திருக்கிறார்.
வேதனையான அவலம்
நடிகர் விவேக் தனது டிவிட்டர் பதிவில், 2010ல் வந்த பலே பாண்டியா படத்தில் ஆழ் துளைக் கிணறு பற்றி, சொன்னேன். ஆனால் இன்று வரை அந்த மெத்தனம் அப்படியே இருப்பது மிக மிக வேதனையான அவலம் என தெரிவித்திருக்கிறார்.
பயத்துடன்..
இயக்குநர் சீனு ராமசாமி பதிவிட்டுள்ள டிவிட்டில் உன் தாயின் கரங்களில் நீ திரும்பி வந்து தவழும் தருணங்களுக்காக பயத்துடனும் பிரார்த்தனையுமாக விழித்திருக்கிறோம் மகனே..
ஆழத்துளையிடும் சத்தம் இதயத்தில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.. என உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.
மீண்டு வாடா
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தடைகளைத் தாண்டி மீண்டு வாடா சுஜித் என பதிவிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











