இனி தான் ஆரம்பம்.. தலைவர் ஆட்டம் ஆரம்பம்.. வாழ்த்து சொல்லி ரஜினியை வரவேற்கும் பிரபலங்கள்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், வரும் 31ஆம் தேதி கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Annaatthe Shooting முடிந்தவுடன் கட்சிப் பணி: Rajini உறுதி

அண்மையில் மன்ற நிர்வாகிகளை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். ஜனவரில் கட்சி துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேமையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.. அற்புதம் அதிசயம் நிகழும் என்றும் தெரிவித்தார்.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

இந்நிலையில் ரஜினியின் இந்த பதிவை பார்த்த ரஜினியின் ரசிகர்கள் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். இதனிடையே திரைத்துறை நட்சத்திரங்கள் பலரும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பூனம் பாஜ்வா

அந்த வகையில் முத்தினக் கத்தரிக்காய், ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை பூனம் பாஜ்வா, ரஜினியின் அரசியல் அறிவிப்பை ரீடிவிட் செய்து, வாழ்த்துகள் தலைவர் என பதிவிட்டுள்ளார்.

சந்தோஷமான செய்தி

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸும் ரஜினியின் அரசியல் அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், நன்றி தலைவா, இந்த செய்தியை கேட்பதில் ரொம்ப சந்தோஷம் என பதிவிட்டுள்ளார்.

வாவ்....

நான் சிவப்பு மனிதன், தீராத விளையாட்டுப் பிள்ளை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இயக்குநர் திரு, ரஜினியின் டிவிட்டை ரீடிவிட் செய்து வாவ்... என பதிவிட்டுள்ளார்.

தலைவர் ஆட்டம் ஆரம்பம்

இதேபோல் இளம் இசையமைப்பாளரும், நடிகர் ரஜினிகாந்தின் உறவினருமான அனிருத் பதிவிட்டுள்ள டிவிட்டில், இனி தான் ஆரம்பம்.. தலைவர் ஆட்டம் ஆரம்பம் என தெரிவித்துள்ளார். மேலும் #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ஆகிய ஹேஷ்டேக்குகளையும் பதிவிட்டுள்ளார்.

நல்ல முடிவு சார்..

இதேபோல் இயக்குநர் மோகன் ஜி பதிவிட்டுள்ள டிவிட்டில் வாழ்த்துக்கள் சார்.. வெற்றியோ தோல்வியோ.. இறங்கி பார்ககுறது தான் சரி.. நல்ல முடிவு சார்.. என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X