twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆசிரியர்கள் தின கோலாகலம்.. கமல் முதல் விவேக் வரை.. குருமார்களை நினைவுகூர்ந்த பிரபலங்கள்!

    |

    சென்னை: ஆசிரியர்கள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருவதோடு தங்களின் குருமார்களையும் நினைவு கூர்ந்துள்ளனர்.

    Recommended Video

    DOCTOR TO CINEMA DIRECTOR | KASAKASA MOVIE DIRECTOR CHAT | FILMIBEAT TAMIL

    இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

    இந்த நன்னாளில் கல்விச்சேவை ஆற்றும் ஆசிரியர்கள் கவுரவப்படுத்தப்படுகிறார்கள். ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

     போடு இன்னைக்கு மஜா தான்.. குட்டி டவுசரில் கிக்கேற்றும் யாஷிகா.. குவியும் டபுள் மீனிங் கமெண்ட்ஸ்! போடு இன்னைக்கு மஜா தான்.. குட்டி டவுசரில் கிக்கேற்றும் யாஷிகா.. குவியும் டபுள் மீனிங் கமெண்ட்ஸ்!

    கமல் வாழ்த்து

    கமல் வாழ்த்து

    இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளதோடு தங்களின் ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன், தனது டிவிட்டர் பதிவில், நாளைய தமிழகத்தின் நம்பிக்கையாம் நம் பிள்ளைகளுக்கு நற்கல்வி தந்து சான்றோர்களாக உருவாக்குவது நல் ஆசிரியர்கள்தான். அவர்களை இன்றும் என்றும் நினைவில் கொண்டு வாழ்த்துவோம். போற்றுவோம் என கூறியுள்ளார்.

    தனது ஆசான்

    தனது ஆசான்

    இதேபோல் தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவரும், நடிகருமான சேரன் சினிமாத்துறையில் தான் சாதிக்க காரணமாயிருந்த தனது ஆசானான இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரை நினைவு கூர்ந்துள்ளார். மேலும் ஆசிரியர்களுக்கும் அவர் வாழ்த்து கூறியுள்ளார்.

    நடிகர் பிரசன்னா

    நடிகர் பிரசன்னா

    நடிகர் பிரசன்னாவும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து கூறியுள்ளார். அதே நேரத்தில் கப்பலோட்டிய தமிழன் வஉசி பிறந்த நாளையும் நினைவு கூர்ந்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்தநாள் இன்று! ஆசிரியர்தினத்தோடு இந்த வீரத்தலைவரையும் நினைவில்கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.

    நடிகர் விவேக்

    நடிகர் விவேக்

    இதேபோல் நடிகர் விவேக்கும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தனது பதிவில் அனுபவங்கள் போல் மிகச் சிறந்த ஆசிரியர்கள் எவருமில்லை. இருப்பினும் என்னுடைய சிறந்த ஆசிரியர்கள் என விவேகானந்தர், வள்ளலார், அப்துல்கலாம், மற்றும் இயக்குநர் கே பாலச்சந்தர் ஆகியோரின் படங்களை ஷேர் செய்துள்ளார்.

    English summary
    Cinema celebrities remembering their teachers on teachers day. They also conveys teachers day wishes on this day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X