மெர்சல் காட்டிய மெஸ்சி.. கோப்பையை தட்டித் தூக்கிய அர்ஜெண்டினா.. கொண்டாடிய சினிமா பிரபலங்கள்!
சென்னை: நடிகர் மோகன்லால் முதல் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் நேற்று இரவு நடந்த பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா இடையேயான கோபா அமெரிக்கா கால்பந்தாட்டத்தை பார்த்து அர்ஜெண்டினாவின் வரலாற்று வெற்றியை கொண்டாடினர்.
Recommended Video
28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டுமொரு வரலாற்று சாதனையை அர்ஜெண்டினா அணி அதுவும் சொந்த மண்ணிலேயே பிரேசில் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
நட்சத்திர கால்பந்தாட்டக்காரர் லியோனல் மெஸ்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஜாம்பவான்கள் மோதல்
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் மற்றும் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சியின் ஆட்டத்தை காண யாரெல்லாம் தயார் என ஆட்டம் தொடங்கும் முன்னே மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் லாலேட்டன் மோகன்லால் போட்ட ட்வீட் செம வைரலானது.

கனவை விடாதீங்க
கனவை நனவாக்கும் முயற்சியை ஒரு போதும் கை விட்டு விடாதீங்க.. நிச்சயம் ஒரு நாள் நிஜ வெற்றி தேடி வரும் என பிக் பாஸ் புகழ் நடிகர் கவின் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது. மெஸ்சியை தூக்கிக் கொண்டாடும் புகைப்படத்தை அவர் ஷேர் செய்துள்ளார்.

கையில் கோப்பை
கையில் கோப்பையுடன் லியோனஸ் மெஸ்சி கொடுத்துள்ள அந்த ஒரு அற்புதமான புகைப்படத்தை பகிர்ந்த ரசிகரின் ட்வீட்டை ஷேர் செய்து தனது சந்தோஷத்தை கொண்டாடியுள்ளார் இயக்குநர் ரத்னகுமார். மாஸ்டரை தொடர்ந்து கமலின் விக்ரம் படத்திற்கும் இவர் தான் வசனகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்பைக்கு முத்தம்
குக் வித் கோமாளி பிரபலம் நடிகை பவித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் அர்ஜெண்டினா வெற்றிப் பெற்ற சந்தோஷத்தை மெஸ்சி மற்றும் அர்ஜெண்டிணா அணி கொண்டாடும் வீடியோவையே போட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











