twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நூறு கோடி இந்தியர்களை பெருமைப்படுத்தி விட்டாய்.. தங்கமகன் நீரஜ் சோப்ராவை கொண்டாடும் பிரபலங்கள்!

    |

    சென்னை: ஒலிம்பிக்கில் ஒரு முறையாவது தங்கம் வென்று விட முடியாதா என ஏங்கித் தவித்த இந்தியர்களுக்கு இந்தா பிடிங்க என ஈட்டியை எறிந்து தங்கத்தை தட்டித் தூக்கிக் கொண்டு வந்து தந்து இருக்கிறார் நீரஜ் சோப்ரா.

    இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் இந்த வரலாற்று சாதனையை ஒட்டுமொத்த இந்தியர்களும் கொண்டாடி வருகின்றனர்.

    மலையாள நடிகர் மம்மூட்டி முதல் ஊர்வசி ரவுத்தேலா வரை ஏகப்பட்ட பிரபலங்கள் நீரஜ் சோப்ராவை தூக்கிக் கொண்டாடி வருகின்றனர்.

    ஹைகோர்ட் விதித்த 48 மணிநேர கெடு.. சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவாரா நடிகர் தனுஷ்? ஹைகோர்ட் விதித்த 48 மணிநேர கெடு.. சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவாரா நடிகர் தனுஷ்?

    முதல் தங்கம்

    முதல் தங்கம்

    சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான தங்க பதக்கத்தை வென்று ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தி இருக்கிறார் தங்க மகன் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதல் பிரிவில் கலந்து கொண்டு 12 வீரர்கள் பங்கேற்ற இறுதிச்சுற்றில் அவர் வீசிய 87.58 மீட்டரை மற்ற வெளிநாட்டு வீரர்கள் தாண்டாத நிலையில் தங்கம் இவருக்கு சொந்தமானது.

    நூறு ஆண்டுகால தவம்

    நூறு ஆண்டுகால தவம்

    ஒலிம்பிக்கில் ஒரு முறையாவது தங்கம் வெல்ல முடியுமா என இந்தியா கடந்த 100 ஆண்டுகளாக காத்திருந்த நிலையில், அந்த தாகத்தை போக்கி அசத்தி விட்டார் நீரஜ் சோப்ரா என ஆடை பட இயக்குநர் ரத்னகுமார் ட்வீட் போட்டு நீரஜை பாராட்டி உள்ளார்.

    ராஷ்மிகா வாழ்த்து

    ராஷ்மிகா வாழ்த்து

    ஓ மை காட்.. தங்கம் கிடைச்சிடுச்சு.. உங்களது இந்த வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துக்கள் நீரஜ் சோப்ரா என குஷியில் குத்தாட்டம் போடும் எமோஜியையும் வெளியிட்டு நடிகை ராஷ்மிகா மந்தனா போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

    விக்ரம் பிரபு ஹாப்பி

    விக்ரம் பிரபு ஹாப்பி

    இந்தியாவின் சிறந்த விளையாட்டு தருணம் இது. இந்த போட்டியை லைவ்வாக பார்த்ததில் ரொம்பவே ஹாப்பி என நடிகர் விக்ரம் பிரபு இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடி வருகிறார். வாட் எ சாம்பியன் நீங்கள் என நீரஜ் சோப்ராவை மனதார பாராட்டி உள்ளார் விக்ரம் பிரபு.

    ஐகானிக்

    ஐகானிக்

    இன்று நீரஜ் சோப்ரா செய்த வரலாற்று சாதனை எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இந்தியர்கள் அனைவரும் நினைத்து பார்க்க வேண்டிய ஒன்று என நடிகை ஊர்வசி ரவுத்தேலா தனது ட்விட்டர் பக்கத்தில் ஐகானிக் என ட்வீட் செய்து தங்க மகனை பாராட்டி உள்ளார்.

    ஆத்மிகா வாழ்த்து

    ஆத்மிகா வாழ்த்து

    இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெற்றிப் பெற்று ஒட்டு மொத்த இந்தியர்களுக்கு பெருமை தேடித் தந்திருக்கீங்க நீரஜ் சோப்ரா என நடிகை ஆத்மிகா மனதார வாழ்த்தி உள்ளார்.

    மம்மூட்டி மகிழ்ச்சி

    மம்மூட்டி மகிழ்ச்சி

    ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமைப்பட வைத்துவிட்டாய்.. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் மகிழ்ச்சி நீரஜ் சோப்ரா என சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்து அசத்தி வரும் மலையாள நடிகர் மம்மூட்டி போட்டுள்ள ட்வீட்டை அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    கோல்ட்

    கோல்ட்

    கோல்ட் இட் இஸ்.. நீரஜ் சோப்ரா லெஜண்ட் என பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் தனது பெரிய டிவியில் ஈட்டி எறிதல் போட்டியை கண்டு கொண்டே எடுத்த வீடியோவை ஷேர் செய்து தங்க மகன் நீரஜ் சோப்ராவின் அபார சாதனையை பார்த்து வியந்து போய் ட்வீட்டியுள்ளார்.

    ஒலிம்பிக்கில் ஒலித்த தேசிய கீதம்

    ஒலிம்பிக்கில் ஒலித்த தேசிய கீதம்

    டோக்கியோ ஒலிம்பிக்கில் நமது தேசிய கீதத்தை வெற்றிப் பதக்கத்துடன் ஒலிக்க செய்த தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என நடிகரும் இயக்குநருமான சசிகுமார் ட்வீட் போட்டு வாழ்த்தி உள்ளார்.

    நூறு கோடி இந்தியர்களுக்கு

    நூறு கோடி இந்தியர்களுக்கு

    சார்பட்டா பரம்பரை படத்தின் நாயகன் ஆர்யா கபிலனாக வெற்றி பெற்றதை கண்டு ரசித்த ரசிகர்கள், இந்தியாவின் முதல் தங்க பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ராவை பாராட்டி வருகின்றனர். 100 கோடி இந்தியர்களுக்கு இது மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும் என ஆர்யா ட்வீட் போட்டுள்ளார்.

    மோகன்லால் வாழ்த்து

    மோகன்லால் வாழ்த்து

    ஒலிம்பிக்கின் வரலாற்றில் எப்போதுமே இந்த தருணம் நீங்காமல் நிலைத்திருக்கும். நீ வீசிய அந்த ஈட்டி பல இந்தியர்களுக்கு பாடமாக அமையும் என நடிகர் மோகன்லால் தங்கத்தை வென்று தந்த தங்கத்தை ட்வீட் போட்டு பாராட்டி உள்ளார்.

    English summary
    Indian Cinema celebrities like Mohanlal, Mamooty, Varun Dhawan, Urvashi Rautela, Sasi Kumar and many more actors send there wishes to Olympic gold medalist Neeraj Chopra.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X