ஃபன்னி எக்ஸ்பிரஷன்களின் மன்னன்.. மிஸ் யூ சோ மச்.. நடிகர் பாண்டு மரணம்.. பிரபலங்கள் கண்ணீர்!
சென்னை: நடிகர் பாண்டு கொரோனாவால் மரணமடைந்த நிலையில் அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திர நடிகருமான பாண்டு கொரோனாவால் இன்று காலை மரணமடைந்தார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாண்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

பிரபலங்கள் இரங்கல்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாண்டுவின் மனைவியும் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். பாண்டுவின் மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஃபன்னி எக்ஸ்பிரஷன்களின் மன்னன்
அந்த வகையில் நடிகை ஆர்த்தி பதிவிட்டுள்ள டிவிட்டில், பாண்டு அங்கிள் மிஸ் யூ சோ மச்.. ஃபன்னி எக்ஸ்பிரஷன்களின் மன்னர்.. எங்களை அதிகம் சிரிக்க வைத்தவர் நீங்கள்.. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

தனி ஸ்டைலால்
இதேபோல் நடிகர் சிபிராஜும் நடிகர் பாண்டுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் 1990களில் கவுண்டமணி அங்கிள் மற்றும் செந்தில் சார் தமிழ் சினிமாவில் ஆட்சி செய்து கொண்டிருந்த போது தன்னுடை தனிப்பட்ட ஸ்டைலாலும் எக்ஸ்பிரஷன்கள் மற்றும் டயலாக் டெலிவரியால் வெற்றி பெற்றவர். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் பாண்டு சார்.. நீங்கள் மிஸ் பண்ண படுவீர்கள் என பதிவிட்டுள்ளார்.

அண்ணனின் மறைவு அதிர்ச்சி
நடிகர் சூரி பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில் மூத்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு அண்ணனின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.பெரும் நடிகர் மட்டுமல்ல, சிறந்த ஓவிய கலைஞர், பல நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்தவர். சிறந்த மனிதர் பிறரன்பு பண்பாளரின் பிரிவில் வாடும் குடும்பத்தினர் க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என பதிவிட்டுள்ளார்.

ரசிகர்களும் இரங்கல்
இதேபோல் நடிகர் காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் பாண்டுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். திரை பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் பாண்டுவின் நகைச்சுவை காட்சிகளை ஷேர் செய்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











