காலையிலேயே ஓட்டு போட்டாச்சு.. கெத்தாய் போஸ் கொடுத்த சசிகுமார்.. வரிசையில் காத்திருந்த பிரசன்னா!
சென்னை: நடிகர் சசிகுமார் காலையிலேயே வாக்களித்துவிட்டு விரலை காட்டி போஸ் கொடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.
தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் ஆர்வமாக தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

போலீஸ் பாதுகாப்பு
வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றியும், போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் தாங்கள் வாக்களித்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

நமது உரிமையும் கூட
அந்த வகையில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் வாக்களித்துள்ளார். விரலில் வாக்குப்பதிவு மையுடன் இருக்கும் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள சசிகுமார், வாக்களிப்பது நமது கடமை மட்டுமல்ல, நமது உரிமையும்கூட.. என பதிவிட்டுள்ளார்.

நிறைவேற்றுங்கள்
இதேபோல் இயக்குநர் ஏஆர் முருகதாஸும் தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். கை விரலில் அடையாள மை வைத்துள்ள போட்டோவை ஷேர் செய்துள்ள ஏஆர் முருகதாஸ் உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் பிரசன்னா
இதேபோல் நடிகர் பிரசன்னாவும் முகக்கவசம் அணிந்தும் வரிசையில் நின்றும் வாக்களித்துள்ளார். நடிகர் விமலும் வாக்களித்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











