twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டு வா சுஜித்... ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்.. பிரபலங்கள் உருக்கம்!

    |

    Recommended Video

    Aram Director Slams: ராக்கெட் மீது கவனம் செலுத்திய நீங்கள்?

    சென்னை: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் திரைத்துறை பிரபலங்கள் அதுகுறித்து உருக்கமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் மகன் சுஜித் வில்சன். இரண்டு வயதான இந்த குழந்தை நேற்று மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

    குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில், மழைப்பொழிவால் தற்போது மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

    கரீனா கபூருக்கே ஆடிஷன்.. ஆமிர்கான் டெடிகேஷன் வேற லெவல்!கரீனா கபூருக்கே ஆடிஷன்.. ஆமிர்கான் டெடிகேஷன் வேற லெவல்!

    தயார் நிலை

    தயார் நிலை

    ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 70 அடிக்கும் கீழே சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன.

    சேரன் டிவிட்

    இந்நிலையில் குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது குறித்து திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக இயக்குநர் சேரன் பதிவிட்டுள்ள டிவிட்டில், திருச்சி நடுக்காட்டுப்பட்டி அருகே ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து 5மணி நேரமாக மீட்கமுடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் குழந்தைக்காக வேண்டுவோம். "அறம்" போன்ற திரைப்படங்கள் இந்த பிரச்சனையை வலியுறுத்தியும் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததை இந்நிகழ்வு காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

    மீண்டு வா சுஜித்

    மீண்டு வா சுஜித்

    நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் பதிவிட்டுள்ள டிவிட்டில் குழந்தை பத்திரமா உயிரோட மீட்கப்படணும்.. மீண்டு வா சுஜித் எங்களுடைய பிரார்த்தனைகள் உன்னோடு இருக்கிறது என கூறியுள்ளார்.

    தண்டனைதான் தீர்வு

    நடிகர் விவேக் பதிவிட்டுள்ள டிவிட்டில் சுர்ஜித் மீண்டு வரவேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்கிரதை அலட்சியம் இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு என கூறியுள்ளார்.

    மகிழ்ச்சியான முடிவு

    மகிழ்ச்சியான முடிவு

    இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ள டிவிட்டில் போர்வெல்லில் குழந்தையை மீட்கும் பணி 15 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. சுஜித்துக்காக பிரார்த்தனை செய்யுங்கள், இது அறம் திரைப்படத்தின் சோகமான மறு உருவாக்கம்.. அங்கு மகிழ்ச்சியான முடிவு இருக்கும் என நம்புவோம்.

    English summary
    Cinema celebrities talks about Sujith who fell down in the Borewell. Pray for Sujith hashtag is trending in social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X