நடிகர்கள் ரஜினி, கமல், அஜித்.. குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்த சினிமா பிரபலங்கள்!
சென்னை: நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், சிவக்குமார், அஜித் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் காலையிலேயே வாக்களித்துள்ளனர்.
Recommended Video
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதுமே தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் ஆரம்பித்துவிட்டது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

ரஜினி வாக்குப்பதிவு
இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

கமல் குடும்பத்துடன்
இதேபோல் நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் உடன் சேர்ந்து வாக்களித்தார். சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் அவர் வாக்களித்தார்.

நடிகர் சிவக்குமார் குடும்பம்
நடிகர் சிவகுமாரும் குடும்பத்துடன் காலையிலேயே வாக்களித்தார். சிவக்குமார், அவரது மனைவியுடன் வாக்களித்தார். நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா, நடிகர் கார்த்தி, அவரது மனைவி என குடும்பத்தினர் தங்கள் வாக்குகளை தி.நகரிலுள்ள ஹிந்தி பிரச்சார சபாவிலுள்ள வாக்குச்சாவடியில் பதிவுச் செய்தனர்.

ஷாலினியுடன் அஜித்
இதேபோல் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வாக்களித்தார். திருவான்மியூர் வாக்குச்சாவடியில் முகக்கவசம் அணிந்து வந்து நடிகர் அஜித்தும் ஷாலினியும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர்.


Click it and Unblock the Notifications











